திபெத் சந்திர நாட்காட்டிப்படி, பிப்ரவரி 25ம் நாளன்று, திபெத் இன மக்களின் முக்கிய விழாவான திபெத் புத்தாண்டு ஆகும். தற்போது, திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் மக்கள் அனைவரும், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மிகக் குறைவான வருமானம் உடையவர்கள் மற்றும் பணியிலிருந்து ஓய்வு பெற்றோர்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் புத்தாண்டைக் கொண்டாடும் பொருட்டு, திபெத் தன்னாட்சி பிரேதசத்தின் அரசு, மொத்தம் 5 கோடியே 40 இலட்சம் யுவான் மதிப்புள்ள சலுகை நுகர்வு அட்டைகள் மற்றும் ரொக்க பணத்தை உதவியாக வழங்கியுள்ளது.
லாசா நகர், ஒரே விழாக் கோலம் பூண்டிருக்கிறது. பல்வேறு சந்தைகளில் திபெத் இன மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தேவைப்படும் பொருட்களை விறுவிறுப்பாக வாங்கி வருகின்றனர்.
|