• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-23 11:41:21    
சீனப் பண்பாட்டுக் கண்ணோட்டம்

cri
தற்போது, சீனாவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்கள் பற்றிய பாரம்பரிய கலை விழா, பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. தலைசிறந்த சுமார் ஈராயிரம் பொருட்கள் இவ்விழாவில் காணக் கிடைக்கின்றன. தவிர, ஏறக்குறைய ஆயிரம் அரசு சாரா கலைஞர்கள் அங்கு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை அரகேற்றி வருகின்றனர். நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், மிகப் பெரிய அளவு, முழுமையான பல்வகை அம்சம் கொண்ட பாரம்பரிய கலை பொருட்காட்சியாக இது திகழ்கின்றது. கடந்த சில நாட்களில், மிகப் பல மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டுள்ளனர். நவீன சமூகத்தில், பாரம்பரிய கைவினைக் கலை எப்படி பரவலாகுகினஅறது என்பதில், மக்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.

பிப்ரவரி திங்கள் 9ம் நாள் துவங்கிய சீன பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்கள் பற்றிய விழா, இரு வாரங்கள் நடைபெறும் சீன பண்பாட்டு அமைச்சகம், கல்வி அமைச்சகம், தேசிய தொல் பொருள் ஆணையம் முதலியவையும், பெய்ஜிங் மாநகர் அரசும் கூட்டாக இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளன. தேசிய மற்றும் மாநில நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பட்டியலைச் சேர்ந்த 133 பாரம்பரிய கைவினை மற்றும் ஓவியங்கள் இதில் அடங்குகின்றன.

இந்த முறை, சுமார் 10 அமைச்சகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவின் மூலம், பொது மக்கள் பாரம்பரிய கைவினைகளையும், கலைவடிவங்களையும் பற்றி புரிந்துகொள்ளலாம். இந்த விழாவின் போது, தொடர்புடைய கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன. பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களை பாதுகாத்து, உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம், இத்துறையின் தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவது என்பது குறித்து, தொடர்புடைய நிபுணர்கள், அறிவாளர்கள், பாரம்பரிய கைவினையில் ஈடுபடுகின்ற கலைஞர்கள முதலியோர் விவாதித்தனர்.

நண்பர்களே, பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்கள் என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.