• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-23 17:15:27    
கிராமப்புறச் சந்தைகள்

cri

உள்நாட்டு தேவையை விரிவுபடுத்துவதன் மூலம், ஏற்றுமதி இறக்குமதி அமைப்புமுறையின் சீர்படுத்தலை தடையின்றி நனவாக்கி, பொருளாதாரத்தின் அதிகரிப்பு அளவுக்கு மீறிய ஏற்றுமதியைச் சார்ந்திருந்த நிலைமையை மாற்ற சீனா முயன்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், இது, சீன அரசு பரப்புரை செய்து வருகின்ற சீர்திருத்தத் திட்டமாகும். நிதி நெருக்கடி உலகளவில் பரவலாகி, வெளிநாடுகளின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகியதால், ஏற்றுமதி குறைந்த நிலைமையில், உள்நாட்டுத் தேவையை விரிவாக்குவது இன்றியமையாதாது. நாட்டு மக்களின் நுகர்வை தூண்டும் வகையில், தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புறச் சந்தையை விரிவாக்குகின்ற பணியில் சீனா முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறது.

2005ம் ஆண்டு முதல், ஆயிரக்கணக்காண கிராமப்புற பேரங்காடிகளுக்கான திட்டப்பணியை சீன வணிக அமைச்சகம் துவக்கியுள்ளது. 3 ஆண்டுகாலத்தில், தொடர்புடைய கிராமப்புறங்களில், சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேரங்காடிகள் உருவாக்கப்படும். இதன் மூலம், நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையிலான நுகர்வு இடைவெளி குறைக்கப்படும். இது வரை, இத்திட்டபணி ஓரளவு முன்னேற்றங்களை பெற்றுள்ளது. ஹூபெய் மாநிலத்தின் சங்யா மாவட்டத்தைச் சேர்ந்த லுசி எனும் ஊரில், லி சாங் லான் அம்மையார் தூங் ஃபான் பேரங்காடியின் நிர்வாகியாகவுள்ளார். 2009ம் ஆண்டின் வசந்த விழாவின் போது, அவரது பேரங்காடியின் விற்பனைத் தொகை, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட ஒரு மடங்கு அதிகமாகும். இது குறித்து, அவர் கூறியதாவது:

இவ்வாண்டு, விற்பனைத் தொகை பெரிதும் அதிகரித்தது. சாதாரண நாட்களில், ஏறக்குறைய ஆயிரம் யுவானை பெறலாம். இந்த பேரங்காடியை உருவாக்கிய பின், நாள்தோறும், சுமார் ஈராயிரம் யுவான் ஈட்ட முடிகிறது என்று அவர் கூறினார்.

1 2 3