• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-24 13:55:45    
ரியூய்தான் ஏரி (ஆ)

cri

ரியூய்தான் ஏரி, யூஷான் மற்றும் ஆலிஷான் மலைடிவாரங்கலுள்ள வடிநிலங்களில் நீர் பெருகி உருவாகியது. அதன் சுற்றளவு, 35 கிலோமீட்டராகும். அதிக ஆழமான இடம், 30 மீட்டர் வரை இருக்கிறது. அதன் மொத்த பரப்பளவு, 900 ஹெக்டருக்கு மேலாகும். அது ஹாங்ச்சோ நகரின் சிஹூ ஏரியை விட, மூன்றில் ஒரு பங்கு அதிகம்.

அது, தைவானில் புகழ்பெற்ற சுற்றுலா இடமாகும். தைவானில் புகழ்பெற்ற 8 காட்சிதலங்களில் மிக அழகான காட்சியாகும். அது, தைவான் தீவிலுள்ள இயற்கையாக உருவான ஒரே ஒரு ஏரியுமாகும்.

அதன் நடுவில் ஒரு சிறிய தீவு இருக்கிறது. அது Baozaishan எனவும் லாலூ எனவும் அழைக்கப்படுகிறது. இந்தத் தீவு தான், ரியூய்தான் ஏரியின் வடக்கு மேற்கு தெற்கு பகுதிகளைப் பிரிக்கும் எல்லையாகும்.

பரந்து விரிந்து காணப்படும் ரியூய்தான் ஏரி நீர் தெளிவாக இருக்கிறது. அது, அதிகமான மலைகளால் சுழப்பட்டுள்ளது. அதனால், ஓர் ஆண்டில் 4 பருவகாலங்களிலும் காலையிலும் மாலையிலும், மாறுப்பட்ட காட்சிகளை காண்டுகளிக்கலாம். ஜூலை திங்கள் அங்குள்ள தட்பவெப்பம், 22 திகிரி செல்ஸியஸுக்கு கீழாக இருக்கும். ஜனவரி திங்கள் 15 திகிரி செல்ஸியஸுக்கு மேலாகும். குளிர்காலத்தில் அங்குள்ள மிதமான காலநிலை, மக்களுக்கு இதமான உணர்வை ஏற்படுத்துகிறது. அது, ஒரு கோடை வாழிடமாகும்.