2009ம் ஆண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசம் சமூக இலட்சியத்தின் வளர்ச்சிக்கென, சுமார் 500 கோடி யுவானை ஒதுக்கீடு செய்யும். சீனத் தேசிய இன விவகார ஆணையத்திலிருந்து கிடைத்த தகவல் இதை அறிவித்தது.
ஒதுக்கீட்டுத் தொகையின் பெரும் பகுதி, கல்வி இலட்சியத்தின் வளர்ச்சியில் பயன்படுத்தப்படும். பொதுச் சுகாதாரம், அடிப்படை மருத்துவச் சிகிச்சைச் செலவு, விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்கு வழங்கும் மருத்துவச் சிகிச்சை மானியம் ஆகியவற்றுக்கு, 100 கோடி யுவான் ஒதுக்கப்படும்.
வானொலி, தொலைக்காட்சி மற்றும் தகவல் தொழிற்துறையின் வளர்ச்சியிலான ஒதுக்கீடு, சுமார் 20 கோடி யுவானாகும். இது வரலாற்றில் மிக அதிகமானது.
|