24ம் நாள், செவ்வாய் கிழமை, திபெத் சந்திர நாட்காட்டியின்படி, ஆண்டின் இறுதி நாளாகும். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசா, புத்தாண்டு விழாவைக் கொண்டாடும் சூழலில் மூழ்கியுள்ளது.
மகிழ்ச்சியான இசையுடன் மக்கள் விழாவைக் கொண்டாடத் துவங்கியுள்ளனர். நகரம் முழுதும் மலர்கள் மற்றும் விளக்குகளின் கடல் போல் காட்சியளிக்கிறது. திபெத் புத்தாண்டை வரவேற்க, லாசா நகரின் போதலா மாளிகை, புதிய ஆடை உடுத்தியது போல் காணப்படுகிறது. லாசா முழுதும், விழா கொண்டாட்டச் சூழ்நிலை நிலவுகிறது. திபெத்தின் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர்.
|