• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-25 09:49:17    
தமிழ் மூலம் சீனம் பாடம் 150

cri
வாணி – வணக்கம் நேயர்களே, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

க்ளீட்டஸ் – வணக்கம், நேயர்களே.

வாணி -- வழக்கம் போல புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களையும் வாக்கியங்களையும் மீளாய்வு செய்வோம்.

க்ளீட்டஸ் – சரி. நேயர்களே, எங்களுடன் சேர்ந்து பயிற்சி செய்யுங்கள்.

வாணி – கடந்த பாடத்தில் உணவு வகைகள் பற்றி பல சொற்களைக் கற்றுக்கொண்டோம். முதலில், 中餐 zhong can. 中餐 zhong can என்றால் சீனப் பாணி உணவு

க்ளீட்டஸ் – 中餐 zhong can. சீனப் பாணி உணவு

வாணி –மேலை நாட்டு உணவுகள் என்றால் சீன மொழியில் 西餐 xi can என்பதாகும்.

க்ளீட்டஸ் –西餐 xi can என்றால் மேலை நாட்டு உணவுகள்.

வாணி – இந்திய உணவு என்றால் 印度餐 yin du can என்பதாகும்.

க்ளீட்டஸ் – என்னைப் பொருத்த வரை, இது ஒரு பயனுள்ள சொல். 印度餐 yin du can, இந்திய உணவு.

வாணி – மேலும், உணவு பற்றி கோரிக்கை விடுக்கும் போது, நீங்கள் 我想吃中餐,wo xiang chi zhong can என்பதை சொல்லலாம்.

க்ளீட்டஸ் –我想吃中餐,wo xiang chi zhong can。நான் சீனப் பாணி உணவு வகைகளைச் சாப்பிட விரும்புகின்றேன்.

வாணி -- இந்திய உணவு வகைகளைச் சாப்பிட விரும்புகின்றேன் என்றால், சீன மொழியில்我想吃印度餐,wo xiang chi yin du can. என்பதாகும்.

க்ளீட்டஸ் –我想吃印度餐,wo xiang chi yin du can. இந்திய உணவு வகைகளைச் சாப்பிட விரும்புகின்றேன்.

வாணி – மேலும் உணவகத்தில் பயன்படுத்தக் கூடிய சில சொற்கள். முதலில், 茶cha. தேநீர்.

க்ளீட்டஸ் – 茶cha என்றால் தேநீர்.

வாணி – தேநீர் குடிப்பது என்பதைச் சொல்ல வேண்டுமானால், 喝茶,he cha என்பதைச் சொல்லலாம்.

க்ளீட்டஸ் –喝茶,he cha, தேநீர் குடிப்பது.

வாணி – சீனாவில் பசுந் தேனீர் உலகில் மிகப் புகழ்பெற்றது. சீன மொழியில், இது 绿茶lv cha என்பதாகும்.

க்ளீட்டஸ் – 绿茶lv cha, பசுந் தேனீர்.

வாணி – இந்தியாவில் கறுப்பு தேநீர் புகழ்பெற்றது. சீன மொழியில் இது 红茶,hong cha என்பதாகும்.

க்ளீட்டஸ் – 红茶,hong cha, கறுப்பு தேநீர்.

வாணி – சர்க்கரை என்றால் 糖tang என்பதாகும்.

க்ளீட்டஸ் – 糖tang, என்றால் சர்க்கரை.

வாணி – உப்பு என்றால் 盐yan என்பதாகும்.

க்ளீட்டஸ் –盐yan என்றால் உப்பு.

வாணி – ரொட்டி என்றால் 面包,mian bao.

க்ளீட்டஸ் – 面包,mian bao. ரொட்டி

வாணி –饺子,jiao zi என்றால் டாம்புலிங்

க்ளீட்டஸ் – 饺子,jiao zi என்றால் டாம்புலிங்.

வாணி – 果汁,guo zhi. என்றால் பழச்சாறு.

க்ளீட்டஸ் – 果汁,guo zhi. என்றால் பழச்சாறு என்பதாகும்.

இசை

வாணி – சுற்றுலா நிறுவனத்தின் பணியாளர் திரு பாலுவிடம் உணவகத்தின் நிலைமை பற்றி அறிமுகப்படுத்திய பின், விடைபெறுகின்றார். அவர் கூறியதாவது, 祝你夜晚愉快。Zhu ni ye wan yu kuai.

க்ளீட்டஸ் – 祝你夜晚愉快。Zhu ni ye wan yu kuai.

வாணி – 祝你Zhu ni, என்றால் உங்களுக்கு வாழ்த்து என்று பொருள்.

க்ளீட்டஸ் –祝你Zhu ni, உங்களுக்கு வாழ்த்து.

வாணி – 愉快yu kuai என்றால் இன்பம் என்று பொருள்.

க்ளீட்டஸ் –愉快yu kuai என்றால் இன்பம்.

வாணி – 祝你夜晚愉快。Zhu ni ye wan yu kuai. தமிழில், மாலை வணக்கம் என்று பொருள்.

க்ளீட்டஸ் –祝你夜晚愉快。Zhu ni ye wan yu kuai. என்றால் மாலை வணக்கம்.

வாணி – 祝你夜晚愉快。Zhu ni ye wan yu kuai.

க்ளீட்டஸ் – 祝你夜晚愉快。Zhu ni ye wan yu kuai. என்றால் மாலை வணக்கம்.

வாணி – 明天早上八点,我在大堂等你。ming tian zao shang ba dian, wo zai da tang deng ni.

க்ளீட்டஸ் – 明天早上八点,我在大堂等你。ming tian zao shang ba dian, wo zai da tang deng ni.

வாணி –明天ming tian, நாளை.

க்ளீட்டஸ் –明天ming tian என்றால் நாளை.

வாணி – 早上八点zao shang ba dian, என்றால் காலை 8 மணி.

க்ளீட்டஸ் –早上八点zao shang ba dian, காலை 8 மணி அளவில்.

வாணி –大堂 da tang, கட்டிடத்தின் முதல் மாடி என்று பொருள்.

க்ளீட்டஸ் –大堂 da tang, கட்டிடத்தின் முதல் மாடி என்று பொருள்.

வாணி – 明天早上八点,我在大堂等你。ming tian zao shang ba dian, wo zai da tang deng ni. நாளை காலை 8 மணி அளவில், முதல் மாடியில் சந்திப்போம்.

க்ளீட்டஸ் – 明天早上八点,我在大堂等你。ming tian zao shang ba dian, wo zai da tang deng ni. நாளை காலை 8 மணி அளவில், முதல் மாடியில் சந்திப்போம்.

இசை

வாணி – இன்று முதல் தமிழ் மூலம் சீனம் எனும் பாடநூலின் 2வது தொகுதியின் 11வது பாடத்தை மீளாய்வு செய்யத் துவக்குகின்றோம்.

க்ளீட்டஸ் – இந்தப் பாடம் பெய்ஜிங் வந்தடைந்த திரு பாலுவின் முதலாம் நாள் பற்றி கூறுகின்றது.

வாணி – விமான நிலையத்திலிருந்து இப்பகுதியை மீண்டும் ஒரு முறை பார்க்கின்றோம். பாடத்தின் தலைப்பு, சீனா வந்தடைவது. அதாவது, 到达中国。

க்ளீட்டஸ் -- 到达中国。Dao da zhong guo.

வாணி – திரு பாலு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு வந்து சேரந்தார். பெய்ஜிங் சர்வதேச பயணியர் விமான நிலையத்தில் அவர் பணியாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை இதோ.

巴鲁先生,您好。 Ba lu xian sheng, nin hao. திரு பாலு, வணக்கம்.

க்ளீட்டஸ் -- 巴鲁先生,您好。 Ba lu xian sheng, nin hao. திரு பாலு, வணக்கம்.

வாணி -- 欢迎您来中国。 huan ying nin lai zhong guo. 欢迎,huan ying,வரவேற்பு. 来, lai, வருகை. 欢迎您来中国。 huan ying nin lai zhong guo. சீனாவுக்கு வருகை தருவதற்கு வரவேற்புகள்.

க்ளீட்டஸ் --欢迎您来中国。 huan ying nin lai zhong guo. சீனாவுக்கு வருகை தருவதற்கு வரவேற்புகள்.

வாணி – 请出示您的护照和进关单。qing chu shi nin de hu zhao he jin guan dan. 出示,chu shi, காட்டுதல். 您的, nin de, உங்களுடைய. 护照, hu zhao, கடவுச்சீட்டு, 进关单, jin guan dan, நுழைவுச் சீட்டு. 请出示您的护照和进关单。qing chu shi nin de hu zhao he jin guan dan. தயவு செய்து உங்கள் கடவுச்சீட்டையும் நுழைவுச் சீட்டையும் காட்டுங்கள்.

க்ளீட்டஸ் --请出示您的护照和进关单。qing chu shi nin de hu zhao he jin guan dan. தயவு செய்து உங்கள் கடவுச்சீட்டையும் நுழைவுச் சீட்டையும் காட்டுங்கள்.

வாணி – 给。 Gei. இந்தாருங்கள்.

க்ளீட்டஸ் --给。 Gei. இந்தாருங்கள்.

வாணி – 好,您可以进入中国了。Hao, nin ke yi jin ru zhong guo le. 可以, ke yi, முடியும். 进入, jin ru, நுழைதல். 好,您可以进入中国了。Hao, nin ke yi jin ru zhong guo le. சரி, இப்போது நீங்கள் சீனாவில் நுழையலாம்.

க்ளீட்டஸ் -- 好,您可以进入中国了。Hao, nin ke yi jin ru zhong guo le. சரி, இப்போது நீங்கள் சீனாவில் நுழையலாம்.

வாணி – சரி, இப்போது, இந்த உரையாடல் முழுவதையும் கேளுங்கள். க்ளீட்டஸ், நீங்கள் திரு பாலுவாக பங்கேற்கலாம். நான் சுங்கப் பிரிவின் பணியாளராக பேசுவேன்

வாணி --巴鲁先生,您好。 Ba lu xian sheng, nin hao.

欢迎您来中国。 huan ying nin lai zhong guo.

请出示您的护照和进关单。qing chu shi nin de hu zhao he jin guan dan.

க்ளீட்டஸ் – 给, gei.

வாணி --好,您可以进入中国了。Hao, nin ke yi jin ru zhong guo le.

க்ளீட்டஸ் – 谢谢,xie xie.

இசை

இசை

வாணி – சரி, நேயர்களே. இன்றைய வகுப்பு நிறைவடைந்தது. மறவாமல் வீட்டில் அதிக பயிற்சி செய்யுங்கள்.

க்ளீட்டஸ் -- peng you men, xi qi jie mu zai jian.