• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-24 11:12:57    
இறால் இடம்பெறும் ஒரு உணவு வகை

cri

வாணி – இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் இன்னொரு சுவையான சீன உணவு வகை பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.இன்று இறால் இடம்பெறும் ஒரு உணவு வகை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
க்ளீட்டஸ் – பொதுவாக பலருக்கு இறால் படிக்கும். இதன் சீனப் பெயர் என்ன?
வாணி – இன்றைய உணவு வகையின் பெயர் Shao Yao Xia Bing. Shao Yao என்பது ஒரு வகை மலரின் பெயர். இந்த உணவு வகையின் நிறம் பொன் நிறமான இவ்வகை பலரைப் போல் இருக்கின்றது.
க்ளீட்டஸ் – அப்படியா. சரி, வாணி, தேவையான பொருட்கள் என்னவென்று கூறுங்கள்.
வாணி – கூறுகின்றேன்.
இறால் இறைச்சி அதாவது தோல் நீக்கப்பட்ட இறால் 250 கிராம்
Chufa பழம் 3
6 முட்டைகளின் மஞ்சள் கரு
1 முட்டையின் வெள்ளை பகுதி
வெங்காயம்
சமையல் மது 2 தேக்கரண்டி
உப்பு 5 கிராம்
உலர்ந்த தக்காளி மாவு 2 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத் தூள் அரை தேக்கரண்டி
இஞ்சிச் சாறு 5 மில்லி லிட்டர்
வாணி – இஞ்சி சாறு எப்படி தயாரிப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
க்ளீட்டஸ் – தெரியும். இஞ்சியை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, கொஞ்சம் தண்ணீரை இதில் சேர்க்க வேண்டும். நன்றாக ஊறிய பின், இஞ்சித் துண்டுகளை நீக்கினால், எஞ்சுவது, இஞ்சிச் சாறு தான்.
வாணி – சரி. Chufa பழங்களை சுத்தம் செய்து, அவற்றின் தோலை நீக்கவும். பிறகு, அவற்றையும் வெங்காயத்தையும் நன்றாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
க்ளீட்டஸ் – இறால் இறைச்சியையும் சுத்தம் செய்ய வேண்டும். அவற்றின் முதுகிலுள்ள கறுப்பு நிறமான பொருட்களை நீக்கவும். கத்தியின் அடிப்பகுதியை பயன்படுத்தி அவற்றை மாவாக்கவும். இறால் தூள், சமையல் மது, நறுக்கப்பட்ட வெங்காயம், இஞ்சிச் சாறு ஆகியவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, ஒரே திசையில் நன்றாக கிளற வேண்டும்.
வாணி – அதற்குப் பின், இந்தப் பாத்திரத்தில் உலர்ந்த தக்காளி மாவு, நறுக்கப்பட்ட Chufa பழம் ஆகியவற்றை கொட்டலாம். முட்டையின் வெள்ளை பகுதியையும் இதில் ஊற்றவும். தொடர்ந்து ஒரே திசையில் நன்றாக கிளறவும். கடைசியில், உப்பு, வெள்ளை மிளகு தூள் ஆகியவற்றை இதில் சேர்க்கவும்.
க்ளீட்டஸ் – 6 முட்டைகளின் மஞ்சள் கருப் பகுதியை ஒரு பாத்திரத்தில் கொட்டி, நன்றாக அடித்து கிளற வேண்டும். ஆவி வாணலியை அடுப்பின் மீது வைத்து, போதிய நீரை ஊற்றவும். கொதிக்க வைத்த பின், முட்டை கரு இடம்பெறும் பாத்திரத்தை இதில் வைக்கவும். சுமார் 15 நிமிட நேரம் ஆவியில் வெப்பம் மூட்டுங்கள்.

வாணி – ஆவியில் வேகவைக்கப்பட்ட முட்டைக் கரு ஆறிய பின், அதை தேக்கரண்டி மூலம் மாவாக்கவும். இறால் தூள்களை மேசை பந்து அளவில் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். அவற்றைக் கொஞ்சம் அழுத்தவும். ஒவ்வொரு இறால் பந்தின் மீதும் முட்டை கரு மாவை சேர்க்கவும்.
க்ளீட்டஸ் – ஆவி வாணலியிலுள்ள நீரை மீண்டும் கொதிக்க வையுங்கள். பிறகு, இறால் பந்தைகளை வாணலியில் வைத்து 7 நிமிடங்கள் ஆவியில் வெப்ப மூட்டுங்கள்.
வாணி – இன்றைய இறால் இடம்பெறும் உணவு வகை தயார்.
க்ளீட்டஸ் – வாணி, இன்றைய உணவு வகையில் எண்ணெய் இடம்பெறாததை கண்டுபிடித்தேன்.
வாணி – ஆமாம், சுவையான உணவுப் பொருளுக்கு சில வேளையில் எண்ணெய் தேவையில்லை. எண்ணெய் குறைவான உணவு வகை இன்றைய மக்களின் உடல் நலத்துக்கு மேலும் நல்லது.