சீனாவின் திபெத்தில் ஜனநாயக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பொன்விழா ஆண்டு என்னும் கண்காட்சி பிப்ரவரி 24ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியுள்ளது. இது சீனாவில் திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தத்தை மையமாக கொண்ட முதலாவது பெரிய ரக கண்காட்சியாகும். துவக்க விழாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பிரச்சார துறை அமைச்சர் லியூ யுன் சான் உரை நிகழ்த்தினார். இந்த கண்காட்சி மூலம் பல்வேறு மாற்றங்கள் பெற்று வளர்ச்சியடைந்துள்ள திபெத்தை உலகில் மக்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்கு துணை புரியும் என்று அவர் கூறினார்.
இந்த கண்காட்சி ஒன்றரை திங்கள் நீடித்திருக்கும். அமைதியான முறையில் திபெத் விடுதலை பெறுவது, ஆயுதந்தரித்த கலகத்தை அமைதிப்படுத்தியது, திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தம், 50 ஆண்டுகளிலான ஒற்றுமைக்கும் பிரிவுக்கும் இடையிலான, மற்றும் முன்னேற்றத்திற்கும் பின்னடைவுக்கும் இடையிலான போராட்டம், பொருளாதாரச் சமூக வளர்ச்சி மற்றும் மனித உரிமை துறையிலான மாபெறும் சாதனைகள் ஆகியவை இந்த கண்காட்சியில் அடங்குகின்றன. 500 நிழற்படங்கள் 180க்கும் மேலான பொருட்கள் மற்றும் வரலாற்று பதிவேடுகள் ஆகியவை, கூறப்படும் திபெத் பிரச்சினை பற்றி தலாய் லாமா குழு பரவலாக்கியுள்ள பல்வகை பொய்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன.
|