திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தத்தின் பொன்விழா தொடர்பான கண்காட்சி பிப்ரவரி 24ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியுள்ளது. இது சீனாவில் திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தத்தை மையமாக கொண்ட முதலாவது பெரிய ரக கண்காட்சியாகும். நிழற்படங்கள், பொருட்கள், வரலாற்று பதிவேடுகள் ஆகியவற்றின் மூலம் திபெத்தில் ஜனநாயக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட கடந்த 50 ஆண்டுகளில் பெறப்பட்டுள்ள சாதனைகள் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வளர்ச்சியடைந்துள்ள உண்மையான திபெத் பற்றி உலகின் மக்கள் அனைவரும் நன்றாக அறிந்து கொள்வதற்கு இது துணை புரியும்.
இந்த கண்காட்சியின் துவக்க விழாவில் சீன பிரச்சாரத் துறை அமைச்சர் லியூ யுன் சான் உரைநிகழ்த்தினார். திபெத்தில் ஜனநாயக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட கடந்த 50 ஆண்டுகளில் நடுவன் அரசின் அக்கறையுடனும் நாட்டு மக்களின் ஆதரவுடனும் திபெத்தில் வாழ்கின்ற பல்வேறு இன மக்கள் அனைவரும் உரிமையாளர்கள் என்ற முறையில் புதிய சமூகத்தை கட்டியமைத்து புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்கு உற்சாகம் காட்டி நவீனமயமான கட்டுமானத்தில் அற்புதங்களை உருவாக்கியுள்ளனர் என்று அவர் கூறினார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது.
ஜனநாயக சீர்திருத்தம் இல்லை என்றால் மிக பல திபெத் மக்கள் விடுதலை பெற்றிருக்க முடியாது. திபெத் சமூகம் பாய்ச்சல் வளர்ச்சியை காண முடியாது. திபெத்தின் பல்வேறு இன மக்களும் இணைந்து அருமையாக வாழ முடியாது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ், சீனத் தனிச்சிறப்பியல்பு மிக்க சோஷலிச பாதையிலும் தேசிய தன்னாட்சி அமைப்பு முறையிலும் ஊன்றிநின்றால்தான் ஒற்றுமையான செழுமையான ஜனநாயக நாகரிகம் கொண்ட புதிய திபெத்தை கட்டியமைக்க முடிந்தது என்பதை வரலாறு கோடிட்டுக்காட்டுகின்றது என்று அவர் கூறினார்.
பண்டை காலம் தொட்டு திபெத் சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத பகுதியாகும் என்பதை கண்காட்சியில் வைக்கப்பட்ட பல வரலாற்று பதிவேடுகள் வலிமையாக காட்டியுள்ளன. பழைய திபெத்தில் அமுலாக்கப்பட்ட அரசியல் மற்றும் மதம் இணைந்த நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையின் இருண்ட பகுதிகளை இந்த பதிவேடுகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. 1959ம் ஆண்டு திபெத்தின் பிற்போக்கு தலைமை பீடம் நடத்திய ஆயுதந்தரித்த கலகத்தை இந்த பதிவேடுகள் தெளிவுப்படுத்தியுள்ளன. திபெத்தில் ஜனநாயக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முன்னேற்றப் போக்கும் கடந்த 50 ஆண்டுகளில் திபெத்தில் ஏற்பட்ட தலைகீழான மாற்றங்களும் மக்களின் கண்களின் முன்னால் வைக்கப்படுகின்றன.
இது பற்றி சீனத் திபெத்தியல் ஆய்வு மையத்தின் திரு ஜு ச்சியௌ குவே கூறியதாவது. நடப்பு கண்காட்சி வெளிநாட்டு மக்களுக்கு பல உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளது. தலாய் லாமாவின் உண்மையான முகத்தை அவர்கள் அறிந்து கொள்ள துணை புரியும். தலாய் லாமாயின் ஆட்சியிலிருந்த பழைய திபெத் எது என்பதை பல மேலை நாட்டவர்கள் இதுவரை அறிந்து கொள்ள வில்லை. இந்த கண்காட்சியை காண்பதன் மூலம் திபெத் மக்கள் பற்றி கவனம் செலுத்துவோர் திபெத் மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள துணை புரியும் என்று அவர் கூறினார்.
கண்காட்சியை காண வருகை தந்தவர்களில் ஒருவரான புப்புச்சோமா அம்மையார் திபெத்தை சேர்ந்தவராவார். இதை பற்றி அவர் கூறியதாவது. கண்காட்சியை பார்த்த பின் நான் அதிர்ச்சியடைந்தேன். உண்மையான திபெத்தை இந்த கண்காட்சி மூலம் மக்கள் அறிந்து கொள்ளலாம். என் தாத்தா, பாட்டி மற்றும் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக திபெத்தில் வாழ்ந்துள்ளனர். புதிய வாழ்க்கைக்கும் பழைய வாழ்க்கைக்கும் மிக பெரிய இடைவெளி இருக்கின்றது என்றார் அவர்.
|