சீனப் பெருநிலப்பகுதி, தைவானுக்கு அஞ்சல் மூலம் பணம் அனுப்பும் சோவையை, 26ம் நாள் துவங்கும். இரு கரைகளும் ஒன்றுக்கொன்று பணம் அனுப்பும் வசதி நிறைவேற்ளப்படும் என்று சீன அரசவையின் தைவான் விவகார பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபான்லிச்சிங் அம்மையார் 25ம் நாள் பெய்ஜிங்கில் கூறினார்.
இரு கரைகளின் அஞ்சலக உடன்படிக்கையின்படி, கடந்த டிசம்பர் 15ம் நாள், இரு கரைகள் பன்முக, நேரடி அஞ்சல் சேவையை நனவாக்கியுள்ளன என்று 25ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
தற்போது, பெருநிலப்பகுதியின், 2000க்கு மேலான இடங்களிலிருந்து, தைவானுக்கு அஞ்சல் மூலம் பணம் அனுப்பப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
|