திபெத் சந்திர நாட்காட்டிப் படி, பிப்ரவரி 25ம் நாள் திபெத் புத்தாண்டின் முதல் நாளாகும். புத்தாண்டு கொண்டாடுவதை சில அரசியல் கோரிக்கைகளுடன் இணைக்க முடியாது என்று சீனத் திபெத்தியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் Luorongzhandui 25ம் நாள் கருத்து தெரிவித்தார்.
2008ம் ஆண்டின் மார்ச் 14ம் நாள் லாசாவில் நிகழ்ந்த வன்முறையை காரணமாக்கி, திபெத் இன மக்கள் திபெத் புத்தாண்டை கொண்டாடக் கூடாது என்று சிலர் அண்மையில் தூண்டி விடுட்டது பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதர தேசிய இனங்களின் புத்தாண்டுகள் போல், புத்தாண்டை கொண்டாடும் வழிமுறையின் மூலம், கடந்த ஆண்டில் நிகழ்ந்த தீமைகளுக்கு விடை கொடுத்து, புதிய ஆண்டில் மேலதிக இன்பங்களைப் பெற வேண்டுமென விரும்பும் பொருள், திபெத் புத்தாண்டுக்கும் உள்ளது என்று இந்த ஆய்வு மையத்தின் மற்றொரு ஆய்வாளர் Lian Xiangmin கூறினார். திபெத் மக்கள் இப்புத்தாண்டை மகிழ்ச்சியாகவும் அருமையாகவும் கொண்டாட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
|