• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-25 12:18:34    
பெய்சிங்கில் திபெத் புத்தாண்டு

cri

திபெத் நாள் காட்டியின் படி, 25ஆம் நாள் திபெத் புத்தாண்டின் முதல் நாளாகும். புத்தாண்டை வரவேற்கும் வகையில், பெய்சிங் மாநகரில் வாழ்கின்ற மக்கள் பல்வகை கொண்டாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பெய்சிங் மாநகரில் உள்ள மிகப் பெரிய திபெத் மரபுவழி புத்தமதக் கோயிலில் இன்று காலை 8.20மணிக்கு பாரம்பரிய விழா நடைபெற்றது. இந்த சிறப்பான விழா பல பத்து ஆயிரம் மக்களை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெய்சிங் திபெத் இடை நிலை பள்ளியில், பாரம்பரிய திபெத் தனிச்சிறப்பு வாய்ந்த பல்வகை கொண்டாட்ட நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.

இவ்விழாவைக் கொண்டாடும் வகையில், சீன மத்திய தேசிய இன பல்கலைகழகத்தைச் சேர்ந்த திபெத் மாணவர்கள் நிழற்படக் கண்காட்சி நடத்தியதாக தெரிகிறது.

தவிர, திபெத் ஜனநாயகச் சீர்திருத்தத்தின் பொன்விழா நிறைவுக்கான கண்காட்சி, அதே நாள் பெய்சிங்கில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெய்சிங்கில் வாழ்கின்ற திபெத் இன மக்கள் தங்களது விடுமுறை நேரத்தில் இக்கண்காட்சியை கண்டுகளித்தனர்.