சீனாவில் திபெத் மரபுவழி புத்தமத நம்பிக்கை உடைய, புகழ்பெற்ற தியான்தாங் கோயில் புனரமைப்பு விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. புனரமைக்கப்பட்டுள்ள பெரிய மதமறை மண்டபத்தின் முக்கிய கட்டமைப்பு அடிப்படையில் முடிந்துள்ளது.
இம்மண்டபத்தைப் புனரமைப்பதற்கு 2 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தியான்தாங் கோயில், சீனாவின் கான்சூ மற்றும் சிங்காய் மாநில எல்லையில் அமைந்து உள்ளது. இது 1300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டியமைக்கப்பட்டதாக தெரியவருகிறது.
|