கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் பல்வேறு இடங்களில் வெளியிடப்பட்ட திபெத் என்ற நூல், நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் வாசகர்களின் வெகுவான பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்நூலின் மூலம், மக்கள் உண்மையான திபெத்தை அறிந்து கொள்ள முடியும் என்பது இந்த நூல் பற்றிய கருத்தரங்கின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நூலின் படைப்பாளர் Sun Shuyang தனது பார்வையில், திபெத் பண்பாட்டின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் பற்றி, விரிவாக விளக்கியதோடு, திபெத் பண்பாட்டை, மேலை நாடுகளின் பண்பாட்டுடன் ஒப்பிட்டுள்ளார்.
இந்நூல், உண்மையாகவும், தெளிவாகவும், உயிர்த்துடிப்பாகவும் திபெத்தை அறிமுகப்படுத்துகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள், வெளிநாட்டு வாசகர்கள் குறிப்பாக, திபெத்தில் நிகழ்ந்த தலைகீழான மாற்றங்களையும், திபெத் வரலாறு மற்றும் தற்போதைய நிலையை அறிந்து கொள்வதற்கு, இந்நூல் துணை புரியும் என்று கூறப்படுகிறது.
|