இன்றைய திபெத் எனும் சீனச் செய்தி விளக்க திரைப்படம், சிச்சுவான் மற்றும் சிங்காய் மாநிலங்களின் திபெத் இனப் பிரதேசங்களில் உள்ளூர் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
முழுமையாகாத புள்ளிவிபரங்களின் படி, பிப்ரவரி திங்கள் 19ஆம் நாள் முதல் சிங்காய் மாநிலத்தில் திரைப்படம் வழங்கப்பட்ட 8 நாட்களில், 5ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இதைக் கண்டுகளித்தனர்.
1959ம் ஆண்டுக்கு முன்பு திபெத் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்புமுறையின் பின்னதைவு, இருள் மற்றும் கொடுமையை, இந்த திரைப்படம் உண்மையாக வெளிப்படுத்துகிறது. அத்துடன், திபெத் ஜனநாயக சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த 50 ஆண்டுகளில், திபெத்தின் அரசியல்,பொருளாதாரம்,பண்பாடு மற்றும் சமூகத் துறைகளிலான மாபெரும் முன்னேற்றங்களை, இது காட்டுகின்றது.
|