திபெத் ஜனநாயக சீர்திருத்தத்தின் 50 ஆண்டுகள் எனும் கண்காட்சி
cri
திபெத் ஜனநாயக சீர்திருத்தத்தின் 50 ஆண்டுகள் எனும் கண்காட்சி பிப்ரவரி திங்கள் 24ம் நாள் பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. மார்சு திங்கள் முதல் நாள் நண்பகல் வரை மொத்தம் 14 ஆயிரம் பேர் இதைப் பார்வையிட்டனர். திபெத்தை அமைதியாக விடுதலை செய்தல், ஆயுத கலகத்தைத் தோற்கடித்தல், திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தம், கடந்த 50 ஆண்டுகளில் ஒன்றிணைப்பு மற்றும் பிளவுக்குமிடை போராட்டமும், முன்னேற்றம் மற்றும் பின்னடைவுக்குமிடை போராட்டமும், சமூக பொருளாதார வளர்ச்சி, மனித உரிமை ஆகிய துறைகளிலான மாபெரும் சாதனைகள் ஆகிய 5 பகுதிகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் திபெத்தின் மாபெரும் மாற்றத்தை இது ஆழமாக வெளிப்படுத்துகின்றது.
|
|