• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-02 15:39:11    
திபெத் ஜனநாயக சீர்திருத்தம்

cri

சீன அரசவையின் செய்தி அலுவலகம் 2ம் நாள், கடந்த 50 ஆண்டுகளிலான திபெத் ஜனநாயகச் சீர்திருத்தம் பற்றிய வெள்ளையறிக்கையை வெளியிட்டது. இது, திபெத் பற்றி, சீன அரசால் வெளியிடப்பட்ட எட்டாவது வெள்ளையறிக்கை ஆகும். திபெத்தின் சமூக வளர்ச்சி மற்றும் மனித உரிமையைப் பொறுத்தவரை, ஜனநாயகச் சீர்திருத்தம் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. மேலும், மனித குலத்தின் நாகரிக வளர்ச்சி மற்றும் உலக மனித வரலாற்றில், இது, முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்த வெள்ளையறிக்கை சுட்டிக்காட்டியது.


கணிசமான வரலாற்று தகவல்களின் மூலம், திபெத் ஜனநாயகச் சீர்திருத்தத்தின் பின்னணி மற்றும் வளர்ச்சிப் போக்கு குறித்து இவ்வறிக்கையில் விபரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1951ம் ஆண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தை அமைதியாக விடுதலை செய்வது குறித்த உடன்படிக்கையில், சீன நடுவண் அரசும், அப்போதைய திபெத் உள்ளூர் அரசும் கையொப்பமிட்டன. இவ்வுடன்படிக்கை, 17 அம்ச உடன்படிக்கை என்றும் அழைக்கப்படுகிறது. திபெத்தின் உள்ளூர் அரசின் சீர்திருத்தம் பற்றி இந்த உடன்படிக்கை வலியுறுத்தியது.

 ஆனால், வெளிநாடுகளில், சீனாவுக்கு எதிரான ஆற்றலின் ஏற்பாடு மற்றும் ஆதரவோடு, திபெத்தின் மேல் தட்டு ஆட்சிக் குழு, சீர்திருத்தத்தை எதிர்த்தது. முந்தைய சமூக அமைப்புமுறையை, இக்குழு நீண்டகாலமாக மாற்ற எண்ணவில்லை. அரசியலும் மதமும் ஒன்றிணையும் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையில் இக்குழு ஊன்றி நிற்க விரும்பியது.


1959ம் ஆண்டின், மார்ச் திங்கள் பத்தாம் நாள், பதினேழு அம்ச உடன்படிக்கையை, திபெத் அரசு கிழித்தெறிந்தது. வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு எதிரான ஆற்றலின் உதவியுடன், திபெத் அரசு வெளிப்படையாக ஆயுத கலகத்தைத் தொடுத்தது. சில மேலை நாடுகளின் ஆதரவுடன், இந்த கலகம், ஏறக்குறைய 2 ஆண்டுகாலம் நீடித்தது. சீன நடுவண் அரசு, திபெத்தின் மக்களுடன் இணைந்து, இந்த ஆயுத கலகத்தை அமைதிப்படுத்த பாடுபட்டது. அந்த ஆண்டின் மார்ச் திங்கள் 28ம் நாள், சீன தலைமையமைச்சர் சௌ ஏன் லைய் அரசவையின் கட்டளை ஒன்றை வெளியிட்டார். திபெத் உள்ளூர் அரசை கலைத்து, அரசியலும் மதமும் ஒன்றிணையும் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையை முடிவுக்கு கொண்டு வருவதாக கட்டள அறிவித்தது. பத்து லட்சத்துக்கு மேலான அடிமைகள் விடுதலை செய்யப்பட்டனர்.


ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின், திபெத்தில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை சீன நடுவண் அரசு மேற்கொண்டு வருகிறது. முந்தைய சமூக அமைப்புமுறையை நீக்கி, நிலச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தியதன் மூலம், அடிமைகளாக இருந்த மக்கள், நில உரிமையாளர்களாக மாறியுள்ளனர். அரசியல் மற்றும் மதம் பிரிக்கப்பட்டு, மத நம்பிக்கைச் சுதந்திரம் உள்ளிட்ட கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. திபெத் மக்களின் மத நம்பிக்கை உரிமை உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. திபெத்தில், பொதுத் தேர்தல் நடந்ததால், மக்கள், நாட்டின் உரிமையாளராக மாறியுள்ளனர்.


கடந்த 50 ஆண்டுகளில், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கு, திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தம், பெரும் பங்கு ஆற்றியுள்ளது. 1965ம் ஆண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டது. தேசிய இனப் பிரதேச தன்னாட்சி அமைப்புமுறை அங்கு உருவாக்கப்பட்டது. 1951 முதல் 2008ம் ஆண்டு வரை, திபெத்தின் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில், சீன நடுவண் அரசு, மொத்தம் 10 ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கிவைத்துள்ளது. 1994ம் ஆண்டு முதல், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 12.8 விழுக்காடு அதிகரித்தது. இது, நாட்டின் சராசரியான மதிப்பைத் தாண்டியது என்று இந்த வெள்ளையறிக்கை தெரிவித்தது.


அதேவேளையில், நடுவண் அரசின் ஆதரவு மற்றும் உதவியுடன், திபெத் மக்களின் வாழ்க்கை நிலை பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது. வீடு, மருத்துவச் சிகிச்சை, கல்வி மற்றும் பண்பாட்டுச் சேவைகள் மேலும் உயர்ந்து வருகின்றன. திபெத்தின் பாரம்பரிய தேசிய இனப் பண்பாடுகள் பாதுகாக்கப்பட்டு, மத நம்பிக்கைச் சுதந்திரத்திற்கு முழுமையான மதிப்பளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, தலைசிறந்த வளர்ச்சி வரலாற்றில் திபெத் நுழைந்துள்ளது என்று இந்த வெள்ளையறிக்கை தெரிவித்தது.