• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-02 15:50:56    
புத்தாண்டிலான சீனாவின் நூல் பொருட்காட்சி வளர்ச்சி

cri
தற்போது, உலக நிதி நெருக்கடியால், தயாரிப்புத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால், வெளியீட்ட துறையைப் பொறுத்தவரை, இது ஒரு வளர்ச்சி வாய்ப்பாகும். வெளிநாட்டிலிருந்து தொடர்புடைய நூல்கள் இறக்குமதி செய்யப்படு வருகின்றன. உள்நாட்டு தொழில் நிறுவனங்களோ தொடர்புடைய பணியாளர்களோ நூல்களின் மூலம், வெளிநாட்டு அனுபவங்களையும் தொடர்புடைய அறிவுகளையும் கற்றுக்கொள்ளலாம். எனவே, இவ்வாண்டு, நூல் வெளியீட்டத் துறையில், பொருளாதாரம் மற்றும் மேலாண்மை பற்றிய தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று தூன் ஃப ஒலி மற்றும் ஒளி மின்னணு வெளியீட்ட நிறுவனத்தின் பொறுப்பாளர் சுன் சௌ தெரிவித்தார்.
உலக நிதி நெருக்கடியின் காரணம், நிதி நெருக்கடியை எப்படி சமாளிப்பது முதலியவை குறித்த பல்வகை நூல்கள், இந்த நூல் பொருட்காட்சியில் காணப்படுகின்றன. மேலை நாடுகளின் பொருளியலாளர் அல்லது பொருளாதார வட்டார பிரமகர்களின் படைப்புகளும் இதில் அடங்குகின்றன. தவிர, சீன பொருளியலாளர்களின் புதிய ஆய்வுப் பலன்களுடன் தொடர்புடைய நூல்கள் இதில் இடம்பெறுகின்றன.
2008ம் ஆண்டின் பிற்பாதியில் முதல், நிதி நெருக்கடி பற்றிய 7 வகை நூல்கள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளன. தனியார் மற்றும் தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை, நிதி நெருக்கடியின் போது, குறிப்பிட்ட அறிவுகளைக் கற்றுக்கொள்வது முக்கியமானது என்று இயந்திர தொழில் துறை வெளியீட்டகத்தின் திட்டமிடல் வாரியத்தின் தலைவர் வான் லெ அம்மையார் தெரிவித்தார்.
நண்பர்களே, புத்தாண்டிலான சீனாவின் நூல் பொருட்காட்சி வளர்ச்சி என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.