திபெத் மக்களின் மத நம்பிக்கைச் சுதந்திரமும் இயல்பான மத நடவடிக்கைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சீன அரசு மார்சு 2ஆம் நாள் வெளியிட்ட திபெத் ஜனநாயகச் சீர்திருத்தத்தின் 50ஆண்டுகள் பற்றிய வெள்ளையறிக்கை இதை தெரிவித்தது.
தற்போது திபெத்திலுள்ள மத நடவடிக்கைக்களுக்கான இடங்களின் மொத்த எண்ணிக்கை 1700க்கு அதிகமாகும். கோயில்களில் வாழ்கின்ற மத குருமார்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 46ஆயிரமாகும். மத நம்பிக்கையுடைய மக்களின் தேவையை இது முழுமையாக நிறைவுச் செய்வதாக, வெள்ளையறிக்கை குறிப்பிட்டது.
கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகள் முதல், திபெத்தில் பல்வகை மத பிரிவுகளின் 40க்கு மேலான பாரம்பரிய விழாக்கள் மீட்கப்பட்டு கொண்டாடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
|