சீன நடுவண் அரசு இன்று திபெத் ஜனநாயகச் சீர்திருத்தத்தின் 50ஆண்டுகள் பற்றிய வெள்ளையறிக்கையை வெளியிட்டது. திபெத் பல்வேறு இன மக்களிடம் நடுவண் அரசு காட்டிய கவனம் மற்றும் அக்கறையையும்,. பல்வேறு இன மக்களின் பொது விருப்பங்களையும், இது முழுமையாக வெளிக்காட்டுகிறது என்று, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் துணைத்தலைவர் தேஜீ அம்மையார் 2ஆம் நாள் லாசாவில் தெரிவித்தார்.
வரலாற்றுத் தகவல்களின் மூலம், நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையின் இருள், கொடுமை மற்றும் பின்னடைவை, வெள்ளையறிக்கை வெளிப்படுத்துகிறது. அத்துடன், திபெத் ஜனநாயக சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த 50ஆண்டுகளில், திபெத்தின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாடுத் துறைகளில் காணப்பட்டுள்ள பெரும் மாற்றங்களையும் பெறப்பட்டுள்ள சாதனைகளையும் அறிக்கை காட்டுவதாக, தேஜி அம்மையார் சுட்டிக்காட்டினார்.
|