சீன அரசவை செய்திப் பணியகம் திபெத் ஜனநாயகச் சீர்திருத்தத்தின் 50 ஆண்டுகள் என்ற வெள்ளையறிக்கையை 2ம் நாள் வெளியிட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன், திபெத்தில் ஏற்பட்ட ஜனநாயகச் சீர்திருத்தத்தின் வரலாற்று பின்னணி, வளர்ச்சிப் போக்கு, சீர்திருத்தத்துக்கு பின், திபெத்தின் மாற்றங்கள், சாதனைகள் ஆகியவற்றை இது விபரமாக விவரித்தது.
இவ்வாண்டு திபெத் ஜனநாயகச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த 50வது ஆண்டு நிறைவாகும். ஜனநாயகச் சீர்திருத்தத்தை திபெத் நடைமுறைப்படுத்திய வளர்ச்சிப் போக்கை மீளாய்வு செய்தன் மூலம், திபெத் பிரச்சினையில் தலாய்லாமாவின் போய் கூற்றையும், உண்மையான நோக்கத்தையும், வெள்ளையறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
சீன அரசு வெளியிட்ட திபெத் பிரச்சினை பற்றிய 8வது வெள்ளையறிக்கை இதுவாகும்.
|