• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 10:54:52    
டாங்கா ஓவியத்தின் மதிப்பு

cri

கடந்த சில ஆண்டுகளில் டாங்கா ஓவியம் சேகரிப்பு சந்தை மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2006ம் ஆண்டு தொடக்கம், டாங்கா ஓவியம் சீனாவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத்தில் சேர்க்கப்பட்ட பின் மிங் சிங் வம்சகாலங்களில் தீட்டப்பட்ட டாங்கா ஓவியங்களின் ஏல சந்தையில் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. 2002ம் ஆண்டு டிசம்பர் திங்களில் டியென் சிங் தொல் பொருள் நிறுவனம் "சிங்ஷாசியேன் பொட்ஹிசாடானா சிலை"என்னும் டாங்கா ஓவியம் 55 ஆயிரம் யுவான் என்று ஏலமிட்டு விற்றது. அது அந்த ஆண்டில் சீனாவில் டாங்கா ஓவியம் ஏலமிடப்பட்ட மிக அதிக தொலை பதிவாகும். 2004ம் ஆண்டில் பெய்சிங் ஹென்ஹாய் கழகத்தில் சிங் வம்சகாலத்தின் தொடக்கத்தில் "5 போனிக்ஸ்கள்" தீட்டப்பட்ட ஐந்து டாங்கா ஓவியங்கள் ஒரு லட்சத்து 76 ஆயிரம் யுவான் விலையில் ஏலமிடப்பட்டன. 2005ம் ஆண்டில் சீனாவின் ஜியா தெ ஆட்சிகாலத்தில் தீட்டப்பட்ட "கேலு சியேன் மின் மன்னர்"என்னும் டாங்கா ஓவியம் 13 லட்சத்து 75 ஆயிரம் யுவான் என்ற விலையில் ஏலமிடப்பட்டது. குறுகிய 3 ஆண்டுகளில் டாங்கா ஓவியத்தின் மதிப்பு 20க்கும் அதிகமான மடங்கில் உயர்ந்ததை இது காட்டுகிறது. 2006ம் ஆண்டு கூதியென் ஏலம் நிறுவனம் சிங் வம்சகாலத்தின் சியேலுன் ஆட்சிகாலத்தில் தீட்டப்பட்ட "தாமரை பெரியார்"என்னும் டாங்கா ஓவியம் 10 லட்சத்து 23 ஆயிரம் யுவான் என்ற விலையில் ஏலமிடப்பட்டது. 2002ம் ஆண்டின் ஏப்ரல் 29ம் நாளன்று ஹாங்காங் சியாஸ்ட் ஏலநிகழ்வில் மாபெரும் பூதையல் டாங்கா ஓவியம் மூன்று கோடியே 8 இலட்சத்து 74 ஆயிரத்து 100 ஹாங்காங் டாலர் விலையில் ஏலமிடப்பட்டது. இது உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. அப்போது இந்த ஏலத் தொகை மக்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்த்தது. இந்த உலக சாதனையை உருவாக்கிய டாங்கா ஓவியம் 1994ம் ஆண்டு நியூயார்க் சியாடெஸில் ஏலமிடப்பட்டது. அப்போதைய அதன் மதிப்பு 10 இலட்சம் அமெரிக்க டாலராகும். 8 ஆண்டுகள் கழிந்த பின் அதன் மதிப்பு 3 மடங்காக அதிகரித்தது குறிப்பிடப்பட்டது.


1 2