• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-04 11:19:21    
பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகள்

cri
சர்வதேச நிதி நெருக்கடியால், சீனாவுக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க, கடந்த நவம்பர் திங்கள், பொருளாதாரத்தை முன்னேற்றும் பல நடவடிக்கைகளை சீனா வெளியிட்டது. மக்களின் வாழ்க்கை பற்றிய திட்டப்பணியை விரைவுபடுத்துவது, அடிப்படை வசதிகள், உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழல், பேரழிவுக்குப் பிந்திய புனரமைப்பு முதலியவை, இந்நடவடிக்கைகளில் அடங்கும். இவற்றைச் செயல்படுத்துவதில், 2010ம் ஆண்டின் இறுதி வரை, சீனா சுமார் 4 இலட்சம் கோடி யுவானை ஒதுக்கீடு செய்யும்.

சீனாவின் ஆய்வாளர்கள், இந்தப் பொருளாதார முன்னேற்றத் திட்டம் குறித்து, வரவேற்பைத் தெரிவித்தனர். அடிப்படை வசதிகளுளின் கட்டுமானத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம், உள்நாட்டுத் தேவையை பயனுள்ள முறையில் விரிவாக்கி, நிதி நெருக்கடியால் ஏற்பட்ட வெளிநாட்டுத் தேவையின் குறைவை ஈடு செய்து, சீனப் பொருளாதாரம் நிதானமாக வளர்வதை நிலைநிறுத்த முடியும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.