11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர், மார்ச் திங்கள் 5ம் நாள் துவங்கும். இக்கூட்டத்துடன் தொடர்புடைய ஏற்பாடுகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சீன தேசிய மக்கள் பேரவையின் தலைவர் வூ பாங்கோ 4ம் நாள், பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான ஏற்பாட்டுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட இக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலின் படி, சீன அரசின் பணியறிக்கை, 2008ம் ஆண்டின் தேசிய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சித் திட்டம், 2008ம் ஆண்டு, நடுவண் மற்றும் பிரதேச வரவு செலவு திட்டம், 2009ம் ஆண்டு தேசிய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சித் திட்டம், மத்திய கமிட்டியின் வரவு செலவு திட்டம் முதலியவை, இக்கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும்.
|