• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-04 08:36:48    
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு மீதான எதிர்பார்ப்பு

cri

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் இரண்டாவது கூட்டத் தொடர் மார்ச் 3ம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் துவங்கியது. நடப்பு கூட்டத் தொடர் ஆண்டு கூட்டமாக இருந்த போதிலும் 130 கோடி சீன மக்கள் இதன் மீது முழுமையான நம்பிக்கையை கொண்டுள்ளனர்.


சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு 60 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டதாகும். இக்காலத்தில் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பிரச்சினைகள் பற்றி மாநாட்டில் அரசியல் கலந்தாய்வு முறையில் விவாதிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகக் கண்காணிப்பு முறையில் இவை கையாளப்பட்டுள்ளன. நாட்டு அரசியலின் பல்வேறு துறைகளில் இந்த அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் செல்வாக்கு காணப்பட்டுள்ளது.


தற்போது உலகில் தீவிரமாகிவரும் சர்வதேச நிதி நெருக்கடி தொடர்ந்து சீனாவை பாதித்துள்ளது. சில தொழில் நிறுவனங்கள் திவலாயின. விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த ஊருக்கு திரும்பினர். பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வேலை பெறுவதில் இன்னல்கள் நிறைந்துள்ளன. இவையனைத்தும் மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையவை. அவற்றைச் சமாளிக்க  அரசியல் கலந்தாய்வு மாநாட்டுக் கூட்டத் தொடரில் பயன்மிக்க கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


இன்று துவங்கிய கூட்டத் தொடரில் கலந்து கொண்ட 2100 உறுப்பினர்களில் சீனாவின் 8 ஜனநாயகக் கட்சிகள், கட்சிசாரா பிரமுகர்கள், 56 தேசிய இனங்களின் பிரதிநிதிகள், 5 மதப்பிரிவுகளின் பிரதிநிதிகள், 34 துறையினர்கள் உள்ளிட்டோர் இடம் பெறுகின்றனர். இந்த ஜனநாயக அரசியல் போக்கில் மாநாட்டின் கடப்பாட்டை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று மக்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதில் ஐயமேயில்லை.


கடந்த ஓராண்டில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டிடம் வழங்கப்பட்ட 4700க்கும் அதிகமான கருத்துருக்களில் 90 விழுக்காடு கையாளப்பட்டது அல்லது கையாளப்பட்டு வருகின்றது. அண்மையில் மாநாட்டின் அறிவியல் தொழில் நுட்பத் துறை மற்றும் பொருளாதாத் துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள், அதிகரிப்பை உத்தரவாதம் செய்வது, உள்நாட்டுத் தேவையை விரிவுப்படுத்துவது, கட்டமைப்பை மேம்படுத்துவது, வளர்ச்சியை விரைவுப்படுத்துவது முதலியவை குறித்து சிறப்பு விவாதக் கூட்டம் நடத்தினர். அரசவையின் கீழுள்ள பத்துக்கும் மேலான அமைச்சகங்களின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்தை கேட்டறிந்தனர். சட்டவிதிகள் மற்றும் கட்டமைப்பு உருவாக்கத்தின் மூலம் அரசியல் கலந்தாய்வு மாநாடு நாட்டின் அரசியலில் வெளிக் கொணர்ந்துள்ள பங்கு நாள்தோறும் வலிமையாக காணப்பட்டுள்ளது.


நடப்பு கூட்டத் தொடரில் அரசியல் விவகாரங்களில் பங்கெடுக்கும் உறுப்பினர்களின் உற்சாகம் மேலும் உயர்ந்துள்ளது. கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன் பிப்ரவரி 23ம் நாளன்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் இரண்டாவது கூட்டத் தொடரின் செய்தித் தொடர்பாளர் சௌச்சிச்சுன் ஹாங்காங் மகௌ மற்றும் தைவான் செய்தியாளர்களை தேநீர் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்தார். கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன் செய்தி ஊடகங்களுடன் தொடர்பு கொள்வது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்று ஹாங்காங்கில் வெளியிடப்பட்ட வென்குவே செய்தியேடு அறிவித்தது. இது சீன அரசியல் கலந்தாய்வுத் துறையில் மென்மேலும் வளைந்து கொடுக்கும் முறையில் வெளிப்புறத்துக்கு திறந்து வைப்பதை எடுத்துக்காட்டியுள்ளது என்று வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தகவல் காலத்தில் இணையதளம் உறுப்பினர்கள் அரசியல் விவகாரங்களில் பங்கெடுத்து கருத்து தெரிவிக்கும் வழிமுறையாகியுள்ளது. பிரதிநிதிகள் பலர் தனி வலைப்பூக்கள் நிறுவி அவர்தம் கருத்துருக்களை வெளியிட்டுள்ளனர். அதேவேளையில் இணையப் பயன்பாட்டாளர்கள் கவனம் செலுத்திய கருத்துருக்களை அவர்கள் சேகரிப்பதில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளனர்.
9 நாட்கள் நீடிக்கும் கூட்டத் தொடரில் 2100 உறுப்பினர்கள் மக்களுக்கு புதிய அற்புதத்தை உருவாக்கிக் காட்டுவார்கள் என்பதில் ஐயமேயில்லை.