சீனாவில் 90 விழுக்காட்டு நடுத்தர தொழில் பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்கள் அரசின் உதவியை பெற்றுவருகின்னர். தொழில் கல்வித் துறை சீன அரசால் கல்வித் துறையின் வளர்ச்சியில் முக்கிய உத்திநோக்கு திட்டத்தில் ஒன்றாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு உதவும் கொள்கை முறை தொடர்ந்து மேம்பட்டு வருகின்றது. புதிய உதவிக் கொள்கையின் படி அரசு நடுத்தர தொழில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நிதி உதவித் தொகை ஆண்டுக்கு சுமார் 1800 கோடி யுவானாகும். தவிரவும் 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையான காலத்தில் தொழில் கல்வித் துறையின் அடிப்படை கட்டுமானத்திற்கு சீன அரசு 1000 கோடி யுவானை ஒதுக்கீடு செய்யும்.
தொழில் கல்வியின் வளர்ச்சியைப் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது ஏன்? இதற்கு மூன்று காரணங்கள் உண்டு. முதல், தொழிற்துறைமயமாக்கம் மற்றும் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கு தொழில் துறைசார் கல்வித் தேவையாகும். உற்பத்தி முன்னணியில் உழைப்போரின் கல்வியறிவுத் தரம் குறைவு, தொழில் நுட்ப திறமைசாலி பற்றாக்குறை ஆகியவை சீனாவில் மிக முனைப்பான பிரச்சினைகளில் ஒன்றாகும். ஏற்கனவேயுள்ள தொழில் நுட்பத் தொழிலாளர்கள், அனைத்து தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியாக வகிக்கின்றனர். தொழில் நுட்ப நிபுணர் மற்றும் உயர்நிலை தொழில் நுட்ப நிபுணர் விகிதம் தொழிலாளர் அணியில் 4 விழுக்காடு மட்டுமே. தயாரிப்புத் துறையில் வளர்ச்சியடைந்த கடலோரப் பிரதேசங்களை பார்த்தால் தொழில் நுட்பத் தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. இது தொழிற்துறை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாகியுள்ளது.
இரண்டு, தொழில் கல்வியை பெரிதும் செலவிட்டு வளர்ப்பது சமூகத்தில் வேலையின்மை வேளாண்மை, கிராமப்புறம், விவசாயிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளில் ஒன்றாகும். நவீமயமாக்க வேளாண்மையை வளர்க்க கிராமப்புறங்களில் 9 ஆண்டுகால கட்டாயக் கல்வியை பரவல் செய்யும் அதேவேளையில் தொழில் கல்வியையும் தொழில் நுட்பப் பயிற்சியையும் பெரிதும் வளர்க்க வேண்டும்.
மூன்று, தொழில் கல்வியைப் பெரிதும் வளர்ப்பது நவீன தேசிய கல்வி அமைப்பு முறையின் இன்றியமையாத பகுதியாகும். தற்போது சீனாவின் நகர மற்றும் கிராமப்புறத்தில் ஒரு கோடி இடைநிலைப் பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் உயர் நிலை பள்ளிகளில் சேராமல் இருக்கின்றனர். இலட்சக்கணக்கான உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர முயற்சிக்கின்றனர். பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு பெறும் பிரச்சினை மேலும் கடுமையாகியுள்ளது. லட்சக்கணக்கான பல்கலைக்கழகப் பட்டதாரிகள் உடனடியாக வேலைவாய்பை பெறாத நிலையில் சமூகத்தில் பல்வகை தொழில் நுட்பத் திறமைசாலிகளுக்கான தேவை அளவும் அதிகரித்து வருகின்றது. ஆகவே இந்த நிலைமையில் தான் நடுத்தர தொழில் கல்வியை பெரிதும் வளர்க்கும் சூழ்நிலை உருவாயிற்று.
தற்போது வளர்ச்சியடைந்த நாடுகளும் சரி புதிதாக வளரும் தொழில்மயமாக்க நாடுகளும் சரி, தொழில் கல்வியை வளர்ப்பதை பொருளாதாரத்தை மீட்டு தேசிய ஆற்றலை அதிகரிக்கும் உத்திநோக்கு திட்டத்தின் முக்கிய தேர்வாக கொண்டுள்ளன. 2006ம் ஆண்டு முதல் சீனா மூன்று ஆண்டுகளாக தொழில் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. 2009ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 86 இலட்சத்தை எட்டக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
|