• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-04 12:16:24    
புதிய மருத்துவச் சிகிச்சைச் சீர்திருத்தம்

cri

85 ஆயிரம் கோடி யுவான் எந்த துறையில் செலவிடப்பட வேண்டும் என்பது பற்றி
நீண்டகாலமாக விவாதிக்கப்பட்ட மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பு முறையின் சீர்திருத்தத் திட்டத்தை சீன அரசவை ஜனவரி திங்கள் ஏற்றுக் கொண்டது. இந்த திட்டத்தைத் தடையின்றி நடைமுறைபடுத்தும் வகையில் அடுத்த 3 ஆண்டுகளில் சீனா 85 ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கும். இந்த முயற்சியின் மூலம் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதிலான மக்களின் இன்னலும் சிகிச்சைக்கு கட்டணம் செலுத்துவதிலான சிக்கலும் தணிவடையும்.


2011ம் ஆண்டுக்குள் நகர மற்றும் கிராமப்புறத்திலான மக்களின் அடிப்படை மருத்துவ உத்தரவாத அமைப்பு முறையை நிறுவுவது புதிய மருத்துவச் சீர்திருத்தத்தின் குறிக்கோள்களில் ஒன்றாகும். ஆகவே மருத்துவக் காப்புறுதி மேற்கூறிய உதவித் தொகையில் ஒரு பகுதியாக அமைகின்றது. நகரத் தொழிலாளர்களின் அடிப்படை மருத்துவக் காப்புறுதி, நகர வாசிகளின் அடிப்படை மருத்துவக் காப்புறுதி, புதிய ரக கிராமப்புற ஒத்துழைப்பு மருத்துவமும் நகர கிராமப்புற மருத்துவ உதவியும் கூட்டாக இணையும் அமைப்பு முறை ஆகியவை தற்போது சீனாவின் அடிப்படை மருத்துவ உத்தரவாத முறைமையில் அடங்குகின்றன. நகரங்களில் வேலை செய்வோர், வேலையில்லாதோர், கிராமப்புறத்தில் வாழ்வோர், நகரம் மற்றும் கிராமப்புறங்களில் வாழ்கின்ற வறிய மக்கள் ஆகியோர் இந்த மருத்துவக் காப்புறுதி முறைமையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
அடுத்த 3 ஆண்டுகளில் நகரங்களில் வேலைவாய்ப்பு பெறுவோர் மற்றும் நகர வாசிகளின் அடிப்படை மருத்துவக் காப்புறுதி விகிதமும் புதிய ரகக் கிராமப்புற ஒத்துழைப்பு மருத்துவக் காப்புறுதி விகிதமும் 90 விழுக்காட்டுக்கு மேல் உயர்த்தப்படும். 2010ம் ஆண்டில் சிகிச்சைக்கான மானிய வரையறை ஆண்டுக்கு நபர் ஒருவருக்கு தலா 120 யுவானாகும். மருத்துவச் சிகிச்சைக் கட்டணத்தை திரும்பப் பெறும் தொகை விகிதமும் கட்டணம் செலுத்தும் விகிதமும் உகந்த அளவில் உயர்த்தப்படும்.


திட்டத்தின் படி, புதிய மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பு முறையின் சீர்திருத்தத்தில் கிராமப்புறங்களில் மருத்துவச் சுகாதார வாரியங்களின் ஆற்றல் கட்டுமானத்திற்கு முக்கியமாக ஆதரவளிக்கப்படும். கிராமப்புறங்களிலான பொதுச் சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவர்களின் அணுகு முறையிலான சிக்கள் குறிப்பிட்ட அளவில் தீர்க்கப்படும். மூலிகை மருத்துவ மனை, தொற்று நோய் மருத்துவ மனை, மன நோய் மருத்துவ மனை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை, குழந்தைகளுக்கான மருத்துவமனை முதலியவற்றுக்கு அரசு கொள்கையளவில் முன்னுரிமை வழங்கும்.