11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் மார்ச் 5ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கும். 4ம் நாள் காலை, கூட்டத்தொடரின் செய்தித்தொடர்பாளர் லீ சாவ் சிங் செய்தியாளர் கூட்டத்தை நடத்தி, கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் மற்றும் ஏற்பாட்டு நிலைமை பற்றி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர், சர்வதேச நிதி நெருக்கடி தொடர்ந்து பரவலாகி வரும் பின்னணியில் நடைபெறுகிறது. பொருளாதாரத்தின் நிதானமான வேகமான வளர்ச்சியை நிலைநிறுத்த, கடந்த ஆண்டின் இறுதியில், சீன அரசு, 4 லட்சம் கோடி யுவான் மதிப்புள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை வெளியிட்டது. இது பற்றி, செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த போது, லீ சாவ் சிங் அறிமுகப்படுத்தியதாவது:
நடுவண் அரசு, இரண்டு ஆண்டுகளுக்குள் ஒதுக்கும் 1 லட்சத்து 18 ஆயிரம் கோடி யுவானுடன், உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் சமூகத்தின் முதலீட்டுத்தொகையைச் சேர்ந்தால், மொத்தம் 4 லட்சம் யுவானை எட்டும். இதில், நடுவண் அரசின் ஒதுக்கீட்டுத் தொகை, தேசிய மக்கள் பேரவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். 2009ம் ஆண்டின் தேசிய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சித் திட்டத்தையும், 2009ம் ஆண்டின் நடுவண் அரசின் வரவு செலவு திட்டத்தையும் பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிப்பது, நடப்பு கூட்டத்தொடரின் முக்கிய குறிக்கோளாகும். அதற்குப் பின், தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி, இவ்விருத் திட்டங்களின் செயல்பாட்டு நிலைமைக்கான கண்காணிப்பை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.
கட்டுமானம் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, பலன் குறைவான முதலீடு ஆகியவற்றில் 4 லட்சம் கோடி யுவான் ஒடுக்கீட்டுத்தொகைப் பயன்படுத்தாமல் தவிர்க்கும் பொருட்டு, சீன அரசு மூன்று முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அறிவியல் கண்ணோட்டத்தில் ஒடுக்கீட்டுத் திசையை உறுதிப்படுத்துவது, கண்டிப்பான நிர்வாகத்துடன், கட்டுமான ஒழுங்கிற்கிணங்க, திட்டப்பணிகளைத் தேர்வு செய்வது, கண்காணிப்பை வலுப்படுத்துவது ஆகியவை இதில் இடம்பெறுகின்றன என்றும் லீ சாவ் சிங் வெளியிட்டார்.
சீன அரசியல் அமைப்பு முறையிலான சீர்சிருத்தத்தில் குறிப்பிட்ட முன்னேற்றங்கள் காணப்படலாம். இந்தச் சீர்திருத்தம், சீனாவின் நாட்டு நிலைமைக்கும், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் தேவைக்கும் பொருந்தியது என்று அவர் கருத்து தெரிவித்தார்.
ஜனநாயகம் இல்லா விட்டால், சோஷியலிச நவீனமயமாக்கத்தை நனவாக்க முடியாது என்று நாங்கள் எப்பொழுதும் கருதுகின்றோம். சீனாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம், சீனத் தனிச்சிறப்பியல்புடைய சோஷியலிசத்தின் சுய மேம்பாடு மற்றும் சுய வளர்ச்சியாகும் என்று லீ சாவ் சிங் தெரிவித்தார்.
சர்வதேச நிதி நெருக்கடியினால், சீனா, இதர நாடுகளுக்கு அளிக்கும் உதவிகள் பாதிக்கப்படுமா என்பது பற்றி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு லீ சாவ் சிங் பதிலளித்தார். இந்த நிலைமையில், வளரும் நாடுகளுடனான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை சீனா மேலும் பேணிமதித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சீனா, வளரும் நாடுகளுக்கான உதவித்தொகையையும், ஒத்துழைப்பு நிலையையும் குறைக்காதது மட்டுமல்ல, வளரும் நாடுகளுக்கு இயன்ற அளவில் உதவியை அதிகரித்து, உருவாக்கப்பட்டுள்ள ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை நிறைவேற்றி வருகிறது என்று லீ சாவ் சிங் கூறினார்.
இவ்வாண்டு, 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர், தொடர்ந்து செய்தி ஊடகங்களுக்கு வெளிப்படையாக்கப்பட்டு வருகிறது. சர்வதேச நிதி நெருக்கடி சமாளிப்பு, பொருளாதாரத்தின் நிதான வளர்ச்சி, தூதாண்மை கொள்கை மற்றும் வெளியுறவு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, அரசவையின் தொடர்புடைய பொறுப்பாளர்கள் செய்தியாளர் கூட்டங்களை நடத்தி விளக்கம் அளிப்பர். கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு, சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் செய்தியாளர்களைச் சந்தித்து, ஆர்வம் வாய்ந்த பிரச்சினைகள் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.
|