திபெத் பண்பாடு வளர்ந்து வருகின்றது
cri
கடந்த 50 ஆண்டுகளில், திபெத் தன்னாட்சி பிரதேசம் உள்ளிட்ட திபெத்தின மக்கள் குழுமி வாழும் இடங்களில், திபெத்தின பாரம்பரிய பண்பாடு பயன் தரும் முறையில் கையேற்றப்பட்டு வளர்ந்து வருகின்றது. திபெத் பண்பாடு அழிக்கப்பட்டது என்ற திபெத் சுதந்திர குழுவும் வெளிநாடுகளிலுள்ள சீனா எதிர்ப்பு சக்தியும் பிரச்சாரம் செய்யும் கூற்றுக்கு ஆதாரம் ஒன்றும் இல்லை. சீன சிங்காய் தேசிய இனக் கழகத்தின் தலைவர் he feng அண்மையில், திபெத் ஜனநாயக சீர்திருத்தத்தின் 50 ஆண்டுகள் பற்றிய சீன அரசின் வெள்ளையறிக்கை பற்றி கருத்து தெரிவித்த போது இவ்வாறு கூறினார். துவக்கக் கல்வி முதல் முதுகலை கல்வி வரை, முழு திபெத் இன மக்களின் கல்வி உரிமையைப் பேணிக்காக்க, நடுவண் அரசு ஒரு தொகுதி சலுகைகளை மேற்கொண்டுள்ளது. திபெத் பண்பாடு, சீன நாகரிகம் மற்றும் உலக நாகரிகக் களஞ்சியத்திலான முத்தாக இருப்பதாக உண்மைகள் நிரூபித்துள்ளன என்று he feng கூறினார்.
|
|