• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-04 13:53:12    
சீனாவின் தேசிய பாதுகாப்புக்கான ஒதுக்கீடு

cri

2009ம் ஆண்டில், சீன அரசு அதிகரிக்கும் தேசிய பாதுகாப்புக்கான ஒதுக்கீடு, இராணுவ அதிகாரி மற்றும் வீரர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதில் பயன்படுத்தப்படும். இத்தொகை, இவ்வாண்டின் சீன நிதி ஒதுக்கீட்டில் 6.3 விழுக்காட்டை வகிக்கின்றது. இந்த விகிதம், கடந்த சில ஆண்டுகளில் இருந்ததை விட குறைவு என்று 11வது சீன தேசிய மக்கள் பேரவை  கூட்டத்தொடரின் செய்தித்தொடர்பாளர் லி சாவ் சிங் 4ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

சீன தேசிய பாதுகாப்புக்கான ஒதுக்கீடு, மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் 1.4 விழுக்காட்டை வகிக்கின்றது. அமெரிக்காவின் இந்த ஒதுக்கீடு விகிதம் 4 விழுக்காட்டைத் தாண்டியது. பிரிட்டன் பிரானஸ் முதலிய நாடுகளின் விகிதம், 2 விழுக்காட்டுக்கு மேலாகும். சீனாவின் எல்லைக்குட்பட்ட இராணுவ ஆற்றல், நாட்டின் இறையாண்மையையும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டையும் பேணிக்காக்கும். இதர நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று அவர் தெரிவித்தார்.