• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-04 17:29:31    
திபெத்தின் பொருளாதார வளர்ச்சி

cri
1959ம் ஆண்டு மார்ச் திங்கள், திபெத் மக்களின் கோரிக்கையின் படி, சீன நடுவண் அரசு திபெத் பிரதேசத்தில் ஜனநாயக சீர்திருத்தத்தை மேற்கொண்டு, நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையை நீக்கியது. 10 இலட்சம் அடிமைகள் விடுவிக்கப்பட்டு சுதந்திரத்தை அனுபவிக்க தொடங்கினர். திபெத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 1959ம் ஆண்டின் 17 கோடியே 40 இலட்சம் யுவானிலிருந்து 2008ம் ஆண்டின் 3959 கோடியே 10 இலட்சம் யுவானாக அதிகரித்துள்ளது. 9 விழுக்காடு ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்தத்துக்கு முன், திபெத்தின் விவசாயிகளுக்கும் ஆயர்களுக்கும் சரியான உற்பத்தி கருவிகள் இல்லை. நிகர வருமானம் பற்றி பேசுவதற்கே இடமில்லை. 2008ம் ஆண்டு, திபெத் நகர வாசிகளின் நபர்வாரி வருமானம் 12 ஆயிரத்து 482 யுவானை எட்டியது. 1978ம் ஆண்டில் இருந்ததை விட இது 21 மடங்கு அதிகம்.

முன்னாள் திபெத்தில் நவீனமயமான தொழிற்துறை இருக்கவில்லை. ஆனால் இப்போதோ, மேம்பாட்ட சுரங்க தொழில், கட்டிடப் பொருட்கள், சிறுபான்மையினரின் தேசிய கைவினைத் தொழில், திபெத்திய மருந்து ஆகிய ஆதாரத்தூண்களை கொண்டு, மின்னாற்றல், வேளாண் மற்றும் கால்நடை உற்பத்திப்பொருட்களின் பதனீட்டு தொழிற்துறை, உணவு பொருட்கள் உற்பத்தி துறை ஆகிய திபெத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த புதுமைமயமான தொழிற்துறை முறைமை உருவாகியுள்ளது.

திபெத் ஜனநாயக சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்ட பொன்விழா நிறைவு 2009ம் ஆண்டாகும். இவ்வாண்டு ஜனவரி திங்கள், திபெத் மக்களின் விருப்பத்தின் படி, மார்ச் 28ம் நாளை 10 இலட்சம் அடிமைகள் விடுதலை பெற்ற நினைவு நாளாக நிறுவ திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சட்டமியற்றல் அமைப்பு முடிவு செய்துள்ளது.