சீன அரசின் ஒதுக்கீடு, நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் முக்கிய துறைகளிலும், சமூகப் பொருளாதார வளர்ச்சியின் பலவீனமான துறைகளிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் 5ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
சீன அரசின் நிதி தொகை, பொது மக்களிடமிருந்து வந்ததாகும். அதனால், அவர்களுக்குப் பொறுப்பேற்கும் முறையில் நிதி தொகையைப் பயன்படுத்த வேண்டும் என்று வென்சியாபாவ் கூறினார். அவர் வழங்கிய அரசு பணியறிக்கையின்படி, இவ்வாண்டு, சீன நடுவண் அரசு தொகை 90 ஆயிரத்து 800 கோடி யுவானாகும். மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய திட்டப்பணிக்கான கட்டுமானம், எரியாற்றல் சிக்கல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரின வாழ்க்கைச் சுற்றுச்சூழல் கட்டுமானம், தொழில் நுட்பச்சீரமைப்பு மற்றும் புத்தாக்கம், இருப்புப்பாதை, உயர்வேக நெடுஞ்சாலை முதலிய முக்கிய அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானங்கள், நிலநடுக்கத்திற்குப் பிந்திய புனரமைப்புப் பணி ஆகியவற்றில் இந்த நிதி, பயன்படுத்தப்படும்.
|