சீனா வறுமை ஒழிப்புப் பணியை மேற்கொண்டு, கிராமப்புறங்களில் குறைந்த வருமானம் கொண்டவர்களை பலன் பெறச் செய்து முன்னேற்றம் அடையச் செய்யும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் 5ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
வறிய மக்கலுக்கு உதவும் உத்தி மற்றும் கொள்கையை மேம்படுத்தி, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, வளர்ச்சித் தன்மை வாய்ந்த வறுமை ஒழிப்புப் பணியை நிலைநிறுத்த வேண்டும். வறுமையான மக்களின் உணவு, உடைப் பிரச்சினையை தீர்த்து, வறுமையிலிருந்து அவர்கள் விடுபட்டு, செல்வமடைவதை நிறைவேற்ற வேண்டும் என்றும் வென்சியாபாவ் தெரிவித்தார்.
|