இவ்வாண்டு, நடுவண் நிதித் துறை, சமூகக் காப்புறுதித் துறையில், சுமார் நான்காயிரத்து 280 கோடி அமெரிக்க டாலர் தொகையை ஒதுக்கீடு செய்யும் என்று மதிப்பிடப்படுகிறது. கடந்த ஆண்டில் இருந்ததை விட, இது 17.6 விழுக்காடு அதிகம். உள்ளூர் நிதித் துறைகளும் தமது ஒதுக்கீட்டை அதிகரிக்கும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் 5ம் நாள் பெய்ஜிங்கில் சுட்டிக்காட்டினார்.
சமூகக் காப்புறுதி முறைமையின் மேம்பாட்டை விரைவுபடுத்தி, அதன் பரவல் அளவை விரிவாக்க வேண்டும் என்று வென்சியாபாவ் தம் பணியறிக்கையில் தெரிவித்தார்.
|