• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 15:19:23    
சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு

cri

உலக நிதி நெருக்கடி தீவிரமாகி வரும் நிலையில், இவ்வாண்டு, சீனத் தேசிய மக்கள் பேரவைக் கூட்டத்தொடர், மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு ஆகியவை, உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இவ்வாண்டு, சீனப் பொருளாதார அதிகரிப்பு 8 விழுகாட்டை எட்டுகின்ற நோக்கத்தை நனவாக்குவதோடு, இக்கூட்டத்தொடர்களில் வகுக்கப்படுகின்ற கொள்கைகளுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும் என்பதே இதற்கு காரணமாகும். சீனப் பொருளாதாரம் நிதானமாகவும் சீராகவும் வளர்வது என்பது, உலகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், உலகப் பொருளாதாரம் மேலும் மோசமாவதை தடுப்பதற்கும், சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

உலக நிதி நெருக்கடியைச் சமாளிக்கின்ற நடவடிக்கைகளை சீனா உரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. சீனா தனது பொருளாதாரத்தின் அதிகரிப்பு விகிதத்தை நிலைநிறுத்துவதற்கு இதுவே காரணமாகும். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிழக்காசிய ஆய்வு அலுவலகத்தின் உயர் ஆய்வாளர் டாக்டர் யாங் மு இது பற்றி கருத்து தெரிவித்தார்.

நிதி நெருக்கடியைச் சமாளிக்க, சீன அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொண்டுள்ளது. அதேவேளையில், சீனாவின் நாணய வழங்கல் பெருமளவில் உயர்ந்துள்ளது. இவ்வாண்டின் ஜனவரி திங்களில், சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் கோடி யுவான் வங்கிக் கடன் வழங்கப்பட்டது. இவ்வாண்டின் முற்பாதியில், சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு விகிதம் உயரக்கூடும். நிதி நெருக்கடியை வெற்றிகரமாக சமாளித்த முதல் நாடாக சீனா மாறக் கூடும் என்று அவர் கூறினார்.
ஐ.நாவின் தொடர்புடைய வாரியங்களின் ஆய்வு மற்றும் மதிப்பீட்டின் படி, கடந்த ஆண்டில், உலகப் பொருளாதாரத்தின் அதிகரிப்பில், சீனா 22 விழுக்காடு பங்கு வகிக்கிறது. இவ்வாண்டு, இந்த மதிப்பு, மேலும் பாதியளவு அதிகரிக்கும். உலகப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய ஆற்றல்களில் ஒன்றாக சீனா மாறியுள்ளது. அண்மையில், தாய்லாந்து தலைமையமைச்சர் மாளிக்கையின் அமைச்சர் வீரச்சாய் விரமீட்டிக்குல் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது கூறியதாவது:

தற்போதைய உலகப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, வர்த்தகப் பாதுகாப்புவாதம் மிக முக்கிய அறைகூவலாக விளங்குகிறது. சீனப் பொருளாதாரம், உலகில் முக்கிய இடம் வகிக்கின்றது. வெளிநாட்டுத் திறப்பு வர்த்தக முதலீட்டுக் கொள்கையில் சீனா ஊன்றி நின்று வருகிறது. பிற நாடுகளுடன், வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. உலகப் பொருளாதாரத்தை மீட்டும் பணியில், சீனா முக்கிய பங்காற்றுவதற்கு இது துணை புரியும் என்று அவர் கூறினார்.
சீனப் பொருளாதாரம் நிதானமாக வளர்வது, சர்வதேசச் சமூகம் ஒன்றிணைந்து ஒத்துழைப்பதற்கு நன்மை பயக்கும். இது பற்றி, ரஷிய அறிவியல் கழகத்தின் தொலை கிழக்கு ஆய்வு அலுவலகத்தின் தலைவர் மிகெய்ல் திதரென்கோ கூறியதாவது:

பொருளாதாரம் சீராக வளர்வதை உத்தரவாதம் செய்வதில், சீனா மாபெரும் பங்காற்றியுள்ளது. சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு, உலகப் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் என்று நிபுணர்கள் பலர் சுட்டிக்காட்டினர். அமெரிக்க டாலரை நிதானப்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகள், நிதி நெருக்கடியை சர்வதேசச் சமூகம் கூட்டாகச் சமாளிப்பதற்கு உதவும் என்று அவர் கூறினார்.


சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் பிரச்சினையில், உலகின் பல்வேறு நாடுகள் சீனா மீது மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளன. இருப்பினும், பொருளாதாரத்தின் உலகமயமாக்கப் போக்கில், சீனப் பொருளாதாரமும், நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட பொருளாதார அதிகரிப்பை நனவாக்கும் போக்கில், பல இன்னல்களை சீனா எதிர்நோக்குகிறது. ஆனால், வளரும் நாடான சீனா, நிதி நெருக்கடியை தனியாகச் சமாளிக்க முடியாது. என்றாலும் உலக நிதி நெருக்கடி பரவலாகியுள்ள சூழலில், சீனப் பொருளாதாரம் நிதானமாகவும் விரைவாகவும் வளர்வது, உலகப் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.