• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 10:18:17    
2009ம் ஆண்டு சீனாவின் நம்பிக்கை ஆண்டு

cri

11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத் தொடருக்கான செய்தியாளரின் வலைப்பூவிலிருந்து வரும் செய்தி.


மார்ச் 4ம் நாள் பிற்பகல் செய்தியறிவிப்புக் கோரிக்கையின் படி நான் பெய்ஜிங் செய்தியறிவிப்பு மையத்துக்கு சென்று அங்கே நடைபெற்ற சீன ஜனநாயக நாடமைப்பு சங்கம், தொழில் மற்றும் வணிகச் சம்மேளனம் ஆகியவை கூட்டாக நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டேன். மத்திய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உறுப்பினர்கள் வழங்கிய அறிக்கைகளையும் யோசனைகளையும் கேட்டறிவதினால் இக்கூட்டம் முக்கியமாநதாக காணப்பட்டது.


சீன ஜனநாயக நாடமைப்பு சங்கத்தின் உறுப்பினரும் City குழுமத்தின் தலைமை இயக்குனருமான போஃச்சுன் கூட்டத்தில் வாய்வழி கருத்துரு ஒன்றை முன்வைத்தார். அதாவது 2009ம் ஆண்டை சீனத் தேசத்தின் நம்பிக்கை ஆண்டாக அவர் முன்மொழிந்தார். சீனத் தேசத்தின் ஏறக்குறைய 100 ஆண்டுகால வளர்ச்சி வரலாற்றில் ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாபெரும் பாய்ச்சல் வாய்ப்பு ஏற்பட்டது. 1919ம் ஆண்டில் "மே நான்கு இயக்கம்"நிகழ்ந்தது. சீனத் தேசத்தின் விழிப்புணர்ச்சியை இது காட்டியது. 1949ம் ஆண்டு சீனத் தேசம் சுயசார்ப்பைத் துவக்கியது. 1979ம் ஆண்டு சீனத் தேசம் தன்வலிமைப்படுத்தலைத் துவக்கியது. 2009ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வெற்றியுடன் சீனத் தேசம் தன்னம்பிக்கை பெற்றுள்ளது. 2039ம் ஆண்டு சீனத் தேசம் மறுமலர்ச்சியை நிறைவேற்றி தன்மாண்பைப் பெற வேண்டும் என்று போஃச்சுன் கூட்டத்தில் தெரிவித்தார்.