மார்ச் 5ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கிய 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத் தொடரில் சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அரசு பணியறிக்கை வழங்கிய போது தன்னாட்சிப் பிரதேசத்திலான தன்னாட்சிச் சட்டத்தின் நடைமுறையாக்கத்தை வயிலுறுத்தினார். அத்துடன் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மற்றும் தேசிய இனப் பிரதேசங்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கென நடுவண் அரசு வகுத்த கொள்கைகள் நிறைவேற்றப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
பல்வேறு இனங்கள் ஒன்றிணைந்து போராடுவதையும் செழுமையான கூட்டு வளர்ச்சியையும் முன்னேற்றுவது பல்வேறு தேசிய இன மக்களின் அடிப்படை நலனுக்கு உகந்ததாகும். இந்த ஒற்றுமையைத் ஆட்டமசைவின்றி பேணிக்காக்க வேண்டும். சமத்துவம், ஐக்கியம், ஒன்றுக்கொன்று உதவுவது ஆகியவை நிறைந்த இணக்கமான சோஷியலிச தேசிய இன உறவை மேலும் உருவாக்க வேண்டும் என்று வென்சியாபாவ் கூறினார்.
மதம் தொடர்பான அடிப்படை கோட்பாட்டை பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். சமூகப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதில் மதத்துறையினர் மற்றும் மதநம்பிக்கைகொண்டோரின் உற்சாகமான பங்கை வெளிக்கொணர வேண்டும் என்று வென்சியாபாவ் மேலும் தெரிவித்தார்.
|