தாய்லாந்தில் வெளியிடப்படும் பாங்காக் வணிகச் செய்தியேட்டின் இணையதளம் 4ம் நாள் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. தற்போது முழு உலகமும் சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடர் மீது கவனம் செலுத்திவருகிறது. குறிப்பாக நிதி நெருக்கடியைச் சமாளிப்பது பற்றி சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று கட்டுரை கூறுகின்றது.
உலகின் மூன்றவது பெரிய பொருளாதார அமைப்பு என்ற முறையில் சீனா உள்நாட்டுப் பொருளாதார அதிகரிப்பை மீட்கும் அதேவேளையில் இறக்குமதித் தேவையையும் முன்னேற்ற வேண்டும். இதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து உலகம் விடுப்பட சீனா உதவ வேண்டும். சீனா பொருளாதாரத்தை வளர்க்கும் பயனும் வேகமும் உலகின் பொருளாதார மீட்சிக்கு தேவைப்படும் காலத்தைத் தீர்மானிக்கும் என்று கட்டுரை வலியுறுத்தியுள்ளது.
|