சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடரின் துவக்கத்தை வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் 4ம் நாள் செய்தி வெளியிட்டு, உலக நிதி நெருக்கடியை சமாளிக்க உள் நாட்டுத் தேவையை விரிவுபடுத்துவது, மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது ஆகிய துறைகளில் சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தின.
இந்த கூட்டத்தொடருக்கு கிடைத்த பெரும் பகுதி கருத்துருக்கள் பொருளாதார பிரச்சினைகளுடன் தொடர்புடையவை என்று ஜப்பானிய Ashahi Shinbun அறிவித்தது.
நிதி நெருக்கடியின் பாதிப்பால், இவ்வாண்டு நடைபெறும் சீனத் தேசிய மக்கள் பேரவை கூட்டத் தொடரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டியின் கூட்டத் தொடரும் உலகம் கவனம் செலுத்தும் முக்கிய கூட்டங்களாக மாறியுள்ளன என்று சிங்கப்பூர் Lianhe Zaobao கூறியது.
வேலை வாய்ப்பு, பொருளாதாரம், சமூக நிதானம் ஆகிய பிரச்சினைகள் சீனத் தேசிய மக்கள் பேரவை கூட்டத் தொடரில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று அமெரிக்க CNN அறிவித்தது.
தவிர, பிரான்ஸ், தென் கொரியா, வியட்நாம், பிரிட்டன், பிலிப்பைன், மலேசியா, தாய்லாந்து முதலிய பல நாடுகளின் முக்கிய செய்தி ஊடகங்கள் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டிக் கூட்டத்தொடரின் துவக்கத்தை செய்தி வெளியிட்டன.
|