திபெத் புத்தாண்டின் போது, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் விழிப்பு நிலை நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் Qangba Puncog கூறினார்.
திபெத் புத்தாண்டு கொண்டாட்டத்தை சிலர் புறக்கணித்ததால், லாசா நகர் உள்ளிட்ட இடங்களில் விழிப்பு நிலையில் இருந்ததாக கூறப்படுவது குறித்து, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது, 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு வரும் Qangba Puncog 5ம் நாள் பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.
திபெத் மக்கள் இன்பமாக வாழ்கின்றனர். திபெத்தில் அமைதியான இணக்கமான சூழல் நிலவுகிறது. இந்த சூழலை சிலர் சீர்குலைக்க முயன்றால், திபெத் மக்கள் தமது ஆற்றலின் மூலம் இப்பிரச்சினையை தீர்க்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்று Qangba Puncog கூறினார்.
தவிர, பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை மற்றும் நிதானத்தை நிலைநிறுத்துவது, தற்போது திபெத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
|