• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 16:55:32    
சீனாவிலுள்ள நேபாளத் தூதரக அதிகாரியின் கருத்து

cri

சீனாவிலுள்ள நேபாளத் தூதரக அதிகாரி Nirmal Kafle, 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரின் துவக்க விழாவில் 5ம் நாள் காலை கலந்து கொண்டார். சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் வெளியிட்ட அரசின் பணியறிக்கை, சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கான சீன அரசு மற்றும் மக்களின் நம்பிக்கையையும் ஆற்றலையும் வெளிப்படுத்தியது என்று அவர் கூட்டத்தொடருக்கு பின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தற்போது, உலக நிதி நெருக்கடி தீவிரமாகி வரும் பின்னணியில், நேபாளத்தின் பல்வேறு துறையினரும் அவரும் சீனாவின் இந்த இரண்டு கூட்டங்களிலும் பெரும் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார். சீன அரசு, வளரும் நாடுகளுடன் இணைந்து, நெருக்கடியை கூட்டாக வெற்றிகரமாக கையாள போவதாக வென்ச்சிபாவின் பணியறிக்கை வாக்குறுதி அளித்தது. சீனாவின் இந்த பொறுப்பான மனப்பான்மை, பரந்துபட்ட வளரும் நாடுகளின் அரசுகளுக்கும் மக்களுக்கும் ஊக்கமளிப்பது உறுதி என்று Nirmal Kafle நம்பிக்கை தெரிவித்தார்.