11வது சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டம் 5ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன தலைமை அமைச்சர் வென் ச்சியா பாவ், அரசு பணியறிக்கையை வெளியிட்டார்.

பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் ஒட்டுமொத்த திட்டத்தை இவ்வாண்டில் சீன அரசு பன்முகங்களிலும் மேற்கொள்ளும் என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.
இவ்வாண்டில் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு விகிதம், 8 விழுக்காட்டை எட்டுவது, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 90 இலட்சம் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது ஆகிய குறிக்கோள்களை சீன அரசு வகுத்துள்ளது என்று இவ்வறிக்கை தெரிவித்தது.
|