• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 14:27:49    
நிதி நெருக்கடியைச் சமாளிப்பதில் சீனாவின் நம்பிக்கை

cri

சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தொடர், 5ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ், நடுவண் அரசின் சார்பில் அரசுப் பணியறிக்கையை வழங்கினார். சர்வதேச நிதி நெருக்கடி மோசமாகியுள்ள பின்னணியில், இவ்வறிக்கை, உண்மை நிலைமை மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி, சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளித்து, பொருளாதாரம் நிதானமாகவும் விரைவாகவும் வளர்வதைத் தொடர்ந்து நனவாக்குவதில் சீனாவின் நம்பிக்கை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தியது.

சுமார் 20 ஆயிரம் சொற்களைக் கொண்ட இவ்வறிக்கை, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பொருளாதார நிலைமையை இணைத்து, நிதி நெருக்கடியைச் சமாளித்து, பொருளாதாரத்தின் நிதானமான விரைவான வளர்ச்சியை உத்தரவாதம் செய்வதை, இவ்வாண்டின் அரசுப் பணியின் முக்கிய கடமையாக ஆக்கியுள்ளது. அரிய இந்த நிதி நெருக்கடியைச் சமாளிப்பது குறித்து, சீன அரசு நம்பிக்கையும் ஆற்றலும் கொண்டுள்ளது என்பதை இவ்வறிக்கை உறுதியாக வெளிப்படுத்தியது. நம்பிக்கை என்பது அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய சொல்லாகும்.

நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையும், நீண்டகாலத்தில் செழிப்படையும் போக்கும் மாறவில்லை. இன்னலைச் சமாளித்து, அறைகூவலை வெல்லும் நம்பிக்கை, நிபந்தனை மற்றும் ஆற்றலை நாங்கள் கொண்டுள்ளோம் என்று வென்சியாபாவ் பணியறிக்கையில் தெரிவித்தார்.

உண்மையில், கடந்த ஆண்டில் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க சாதனைகளே சீன அரசின் நம்பிக்கையின் ஊற்றுமூலம் எனலாம். உலகப் பொருளாதார அதிகரிப்பின் மந்த நிலை, சி ச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கம் உள்ளிட்ட சாதகமற்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட போதிலும், சீனப் பொருளாதாரம் நிதானமான விரைவான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தியுள்ளது.

சீன அரசு, சர்வதேச நிதி நெருக்கடியின் முதல் தொகுதி சோதனையை தாக்குபிடிப்பதில், நம்பிக்கை கொண்டுள்ளது. நிதி நெருக்கடியை தீர்க்கும் நடைமுறையை ஆராயும் போக்கில் பெரும் முன்னேற்றங்களை பெற்றுள்ளது. சீனாவின் மீதான நிதி நெருக்கடியின் பாதிப்பு, நாளுக்கு நாள் தீவிரமாகிய பின்னணியில், சீன அரசு, எதிர்நோக்குகின்ற அறைகூவல்களை உணர்ந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கையையும் உரிய அளவிலான கடன் கொள்கையையும் சீன அரசு மேற்கொண்டது. 4 இலட்சம் கோடி யுவான் மதிப்பு கொண்ட முதலீட்டுத் திட்டத்தை வகுத்தது. இரும்புருக்கு, வாகனம் உள்ளிட்ட முக்கிய தொழிற்துறையை முன்னேற்றும் திட்டங்களை வெகுவிரைவில் வகுத்தது. இக்கொள்கைகள் உருவாக்கப்பட்ட வேகம் மற்றும் அளவு, வரலாற்றில் முன்கண்டிராதது. சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், நல்ல பயன் பெற்றுள்ளன என்று வென் ச்சியா பாவ் இவ்வறிக்கையில் தெரிவித்தார். அவர் கூறியதாவது—

பொருளாதார வளர்ச்சியில் காணப்பட்ட முக்கிய முரண்பாடுகளைத் தளர்த்துவது, நம்பிக்கையை அதிகரிப்பது, பொருளாதாரத்தின் வேகமான நிதானமான வளர்ச்சியை நிலைநிறுத்துவது ஆகியவற்றில், இந்த நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றின என்று வென் ச்சியா பாவ் குறிப்பிட்டார்.

சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிப்பதில் சீனா கொண்டுள்ள நம்பிக்கை, இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்கில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சீனப் பொருளாதார வளர்ச்சி, பல நாடுகள் நனவாக்க முடியாத 8 விழுக்காட்டை தாண்டும் என்ற இலக்கு, பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியை உத்தரவாதம் செய்வதென்ற சீன நம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்தியது.

நம்பிக்கையை கொண்ட போதிலும், தற்போதைய கடுமையான பொருளாதாரச் சூழலில், இவ்விலக்கை நனவாக்க, சீனா பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. சர்வதேச நிதி நெருக்கடி தீவிரமாகிக்கொண்டிருக்கின்றது. பொருளாதார வளர்ச்சி, தொடர்ந்து மந்தமடைந்து வருகிறது. பல்வேறு உள் மற்றும் வெளிப்புற காரணிகளால், முன்னெப்போதும் கண்டிராத சிரமங்களையும் அறைகூவல்களையும் சீனா எதிர்நோக்கி வருகிறது என்று வென் ச்சியா பாவ் தெரிவித்தார்.

இருப்பினும் நிதி நெருக்கடியை சீனா வெற்றிகரமாக சமாளிக்கும் என்பதில் ஐயமில்லை.