சீன தேசித்தின் உயர் அதிகார நிறுவனமான தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடர் 5ம் நாள் பெய்சிங்கில் துவங்கியது. ஹுசிந்தாவ், வூ பாங்கோ, வென்சியாபாவ், சியா சிங்லின், லீ சாங்சுன், ஷி ச்சின்பீங், லீ கெச்சியாங், ஹே கோச்சியாங், சோ யூங்காங் உள்ளிட்ட சீனக் கட்சி மற்றும் அரசின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். சுமார் 3000 தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் முன்னிலையில் சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் அரசு பணியறிக்கையை வழங்கினார்.
|