வேலை வாய்ப்பை அனைத்து வழிகளிலும் முன்னேற்றி, ஆக்கப்பூர்வமான வேலை வாய்ப்பு கொள்கையை செயல்படுத்தும் வகையில், சீன நடுவண் நிதித் துறை 4200 கோடி யுவானை ஒதுக்கும் என்று சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் 5ம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார்.
பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு பெறுவதை முக்கியமாக முன்னேற்ற வேண்டும். தவிர, நகரில் இன்னலில் சிக்கியுள்ள மக்கள், வேலைவாய்ப்பு பெறாத குடும்பங்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட உழைப்பாளர்கள் ஆகியோர் உரிய வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு உதவ வேண்டும் என்று வென்சியாபாவ் சுட்டிக்காட்டினார்.
தற்சார்புப் புத்தாக்கத்துக்கு பெரிதும் ஆதரவு அளித்து, புத்தாக்கம் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்குவதை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
|