• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-06 21:45:53    
யீ இனத்தின் விழாக்கள் (இ)

cri

தீப விழா

தீப விழா, சீனாவின் யுன்னான், சிச்சுவான் ஆகிய மாநிலங்களிலுள்ள யீ இன மக்களின் பாரம்பரிய விழாவாகும். சீன பாரம்பரிய சந்திர நாட்காட்டியின்படி 6ம் திங்களின் 24 அல்லது 25ம் நாளில் இது கொண்டாடப்படுகிறது. வேறுபட்ட மொழி மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட பிரதேசங்களில், மக்கள் வேறுபட்ட வழிமுறைகளில் தீப விழாவைக் கொண்டாடுகின்றனர்.

இந்த விழா, யீ இன மக்களைப் பொறுத்தவரை, ஹான் இன மக்களின் வசந்த விழா போல் மிகவும் முக்கியமானது.

இந்த விழாவில் கொண்டாட்ட நடவடிக்கைகள் மிக அதிகம். தேசிய இன தனிச்சிறப்பு வாய்ந்த நடவடிக்கைகளும், பிரதேசத் தனிச்சிறப்பு வாய்ந்த நடவடிக்கைகளும், விழாவின் போது நடத்தப்படும். ஜல்லி கட்டு, கோழி சண்டை, குதிரைப் போட்டி, மற்போர், கூட்டு நடனம், தீபம் ஏற்றிய பேரணி முதலியவை அவற்றில் அடங்குகின்றன.

விழாவின் போது, தீபத்தை ஏற்றுவது, மிக பிரமாண்டமான நடவடிக்கையாகும். விழாவுக்கு முன், யீ இன மக்கள், மாலையில் மூங்கில் அல்லது வைக்கோல்களை சேர்ந்து, தீயை உருவாக்குகின்றனர். தீபத்தை ஏற்றிய பின், அவர்கள் மாலையில் தீபத்தை ஏந்தி ஒரு அணியில் சேர்ந்து நடக்கின்றனர். தீயை சுற்றி ஆடல் பாடல் நடத்தி மதுமானம் அருந்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் 3 நாட்கள் நீடிக்கும்.

Saizhuang விழா

புத்தாண்டு கொண்டாட்டத்தின் கடைசி நாளில், அதாவது சீன சந்திர நாட்காட்டியின்படி முதல் திங்களின் 15ம் நாளில், yongren மாவட்டத்தின் யீ இன மக்கள் இவ்விழாவை கொண்டாடுகின்றனர்.

Saizhuang என்றால், ஆடைப் போட்டி என்பது பொருள்.இது, யீ இன மக்களின் அறிவுத்திறனையும் விவேகத்தையும் வெளிப்படுத்தும் விழாவாகும். இதுவும், மக்கள் தங்களது அழகை வெளிப்படுத்தும் விழாவாகும்.

ஆடைப் போட்டி அரங்கில், வண்ணமான ஆடைகள் பார்வையில் நிறைந்து காணப்படுகின்றன. மக்கள், தொப்பிகள் மற்றும் ஆடைகள் தவிர, பைகள், காலணிகள், முதலியவற்றில் பல்வகை ஓவிய வேலைப் பாடுகளை சித்திரம் செய்து போட்டியிடுகின்றனர்.