Liu Shiming பாடிய சீனாவின் மேற்கு பகுதியிலான சின்ஜியாங் உய்கூர் இனத்தின் நாட்டுப்புறப்பாடலான இளமைக்கால நடனப்பாடல் என்னும் பாடலைக் கேட்டு ரசியுங்கள். அருமையான இராகம், உயிர்துடிப்புடன் கூடிய இதை பொருள் செறிந்த சொற்கள் என, இந்த பாடல் இளமைக் காலத்தை பேணிமதித்து, ஆக்கப்பூர்வமாக வாழ வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றது.
"சூரியன் மறைந்தாலும்,
மறுநாள் காலை மீண்டும் மேலே எழும்.
பூக்கள் வாடி உதிர்ந்தாலும்,
அடுத்த ஆண்டில் மீண்டும் மலரும்.
அழகான பறவை பறந்து விட்டால்
காணாமல் போகும்
என் இளமைக் காலம்,பறவை போல காணாமல் போகிறது." என்று இப்பாடல் ஒலிக்கிறது.
|