• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-06 11:10:04    
நிதி நெருக்கடித் தீர்வுக்கான முயற்சிகள்

cri

சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பைச் சமாளிக்கும் வகையில் சீனா 4 இலட்சம் கோடி யுவான் மதிப்புள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை வகுத்ததோடு வாகனத் தயாரிப்பு, இரும்புருக்கு உற்பத்தி உள்ளிட்ட 10 பெரிய ரக தொழிற்துறைகளை வளர்க்கும் திட்டத்தையும் வெளியிட்டது. உள்நாட்டுத் தேவையை விரிவாக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உத்தரவாதம் செய்ய அண்மையில் 95 ஆயிரம் கோடி யுவான் மதிப்பான நிதிப் பற்றாக்குறைத் திட்டத்தையும் சீனா முன்வைத்துள்ளது.


மார்ச் 5ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கிய 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தில் சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அரசுப் பணியறிக்கை வழங்கிய போது 2009ம் ஆண்டு சீனப் பொருளாதார அதிகரிப்பை 8 விழுக்காடாகவும், நகர மற்றும் கிராமப்புறங்களில் வேலை பெறுவோரின் எண்ணிக்கையை 90 இலட்சமாகவும், பொது மக்களின் நுகர்வு விலை குறிடீட்டின் அதிகரிப்பை 4 விழுக்காடாகவும் நிலைநிறுத்துவதென அறிவித்தார். ஆகவே பொருளாதார அதிகரிப்பை இவ்வாண்டின் அரசுப் பணியின் முக்கிய கடமையாக சீனா வைத்துள்ளது. இதை உத்தரவாதம் செய்யும் பல்வகை நடவடிக்கைகளில் உள்நாட்டுத் தேவை குறிப்பாக நுகர்வுத் தேவையை விரிவுப்படுத்துவது பொருளாதார அதிகரிப்பை நிலைநிறுத்துவதற்கான அடிப்படை அம்சமாக கருதப்படுகின்றது.


பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உள்நாட்டுத் தேவை விரிவாக்குவதை சீனா வலியுறுத்தும் வேளையில் நுகர்வுத் தேவையை அதிகரிப்பதை முக்கிய இடத்தில் வைத்துள்ளது. 4 லட்சம் கோடி யுவான் கொண்ட நிதி ஒதுக்கீடு, நிதி மற்றும் அது தொடர்பான கொள்கைக்கு வழிகாட்டுதலில் பொது மக்களின் வருமானத்தை உயர்த்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி அவர்களின் நுகர்வை ஊக்குவிப்பது முக்கிய அம்சங்களாக கருதப்பட்டுள்ளது. விளைவாக, குறுகிய காலத்தில் பொருளாதார அதிகரிப்பு தூண்டப்படும். நீண்டகாலத்தில் முதலீடு மற்றும் ஏற்றுமதியில் பொருளாதார அதிகரிப்பை அதிகமாக சார்ந்திருந்த கட்டமைப்பு சீராக்கப்படும். நுகர்வு விகிதத்தைப் படிப்படியாக உயர்த்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் முதலீடு, நுகர்வு மற்றும் ஏற்றுமதியின் சமநிலையும் நிதானமும் நிறைவேற்றப்படும்.


நிதி நெருக்கடியைச் சமாளிக்க சீனா மேர்கொண்ட குறுகிய கால நடவடிக்கைகளில் குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடு, சமூகக் காப்புறுதி, கிராமப்புறக் கட்டுமானம், குறைவான வருமானம் கொண்ட மக்களின் வருமானத்தை உயர்த்துவது உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படும். இவ்வாண்டு சீன நடுவண் அரசு மற்று உள்ளூர் அரசாங்கங்களின் நிதிப் பற்றாக்குறை திட்ட மதிப்பு 95 ஆயிரம் கோடி யுவானை எட்டும். இந்தத் தொகையும் இவற்றில் பயன்படுத்தப்படும்.


சர்வதேச நிதி நெருக்கடியினால் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பட்ட அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைக்கென சீனா உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நீண்டகால கண்ணோட்டத்தில் பார்த்தால், பொது மக்களின் சமூகக் காப்புறுதித் தரம் உயர்த்தப்படும். வீடு, மருத்துவச் சிகிச்சை, முதுமைக்கால பாதுகாப்பு, வேலையின்மை ஆகியவை பற்றி மக்கள் கொண்டுள்ள கவலை குறையும். அவர்கள் தாராளமாக வங்கியிலிருந்து மேலதிகமான சேமிப்புத் தொகையை எடுத்து நுகர்வில் செலவிடுவர். கிராமப்புறங்களிலான வளர்ச்சியும் குறைந்த வருமானத்தைப் பெறுவோரின் வருமானமும் உயரும். இவையனைத்தும் குறிப்பிட்ட அளவில் பொது மக்களின் நுகர்வுத் திறனை உயர்த்தும். ஆகவே சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிக்க சீனா மேற்கொண்ட முயற்சிகளைப் பார்த்தால் இவை தனித்தனியானவையாக தொடர்பற்றதாக தெரியும். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் சீனாவின் நகர மற்றும் கிராமப்புறங்களுக்கும் பல்வேறு பிரதேசங்களுக்கும் இடையிலான சம வளர்ச்சியையும் சீனாவின் சமூக மற்றும் பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியையும் முன்னேற்றுவதில் இந்த முயற்சிகள் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. ஒன்று மற்றதைத் தூண்டும் ஆற்றல் இதற்கு உண்டு. உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை இவை தீர்க்க முடியும். இவை நூறு ஆண்டு வளர்ச்சித் திட்டமாக கருதப்படலாம்.