• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-06 11:46:43    
ஹாங்காங் செய்தி ஊடகங்களின் மதிப்பீடு

cri

ஹாங்காங்கில் மார்ச் 6ம் நாள் வெளிவந்த பல செய்தியேடுகள் முக்கிய பக்கங்களில் 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத் தொரின் துவக்கத்தை அறிவித்தன. சீனத் தலைமை அமைச்சர் கூட்டத் தொடரில் வழங்கிய அரசு பணியறிக்கையை விபரமாக அவை விளக்கின. அத்துடன் இந்த அறிக்கை நடைமுறைக்கு ஏற்றது. மக்களின் நம்பிக்கையை தூண்டியுள்ளது என்று அவை கருத்து தெரிவித்தன.


நடுவண் அரசு ஹாங்காங்கிற்கு ஆதரவளிக்கும் கொள்கையை தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அரசு பணியறிக்கையின் வடிவத்தில் உறுதிப்படுத்துவது, ஹாங்காங் நிதி நெருக்கடியைச் சமாளித்து செழுமையை நிலைநிறுத்துவதை நடுவண் அரசு முழுதும் ஆதரிப்பதை போதியளவில் காட்டியுள்ளது என்று வென்குவே செய்தியேட்டின் ஆசிரியர் தலையங்கம் கூறியது.


தாங்கு செய்தியேடு கட்டுரை ஒன்றை வெளியிட்டு அரசு பணியறிக்கையில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் 8 விழுக்காட்டு அதிகரிப்பை முன்வைப்பது உலகின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு சீனா ஆற்றிய முக்கிய பங்குகளில் ஒன்றாகும் என்று தெரிவித்தது.